என் மலர்
நீங்கள் தேடியது "ஆண்ட்ரே ரூப்லெவ்"
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆண்ட்ரே ரூப்லெவ்- செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
- 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்- தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதினார்.
மெல்போர்ன்:
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6-2, 7-6 ( 8-6), 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை ரூப்லெவ் எதிர்கொள்ள உள்ளார்.
மற்றொரு 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), தாமஸ் மார்ட்டின் எட்செவரி (அர்ஜென்டினா) உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சின் 100-வது போட்டியாக அமைந்துள்ளது. 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோகோவிச் அதில் 92-ல் வெற்றி பெற்றுள்ளார்.
- குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று நடந்தது.
- இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுகள் நேற்று நடைபெற்றன.
இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, செர்பிய வீரர் டுசன் லஜோவிக் உடன் மோதினார்.
இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 5-7, 6-3, 6-0 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் முசெட்டி, செக் வீரர் ஜாகுப் மென்சிக்கை சந்திக்கிறார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை சந்தித்தார்.
இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 5-7, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை சந்திக்கிறார்.
- குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நடந்தது.
- ரஷிய வீரர் ரூப்லெவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.
இதில் ரஷிய வீரர் ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்தித்தார்.
இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 6-7 (6-8), 4-6 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதில் வெற்றி பெற்ற பிரான்சிஸ்கோ, இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் முசெட்டியை சந்திக்கிறார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் நம்பர் 6 வீரரான ரூப்லெவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 6-7 (6-8), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்த்உ, தொடரில் இருந்து வெளியேறினார்.
இதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.
இதில் பெரேட்டினி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோலவி அடைந்தார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மாரசோன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 7-6 (7-2), 7-6 ( 9-7) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செக் நாட்டின் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.
இதில் டி மினார் 6-4, 6-4 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் ஹர்காக்ஸ் 6-7 (5-7), 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அரையிறுதியில் ஹர்காக்ஸ் ஸ்பெயினின் அல்காரசுடன் மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 7-6 (10-8) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர் 4-6, 6-4, 6-3 என இத்தாலி வீரர் மேட்டியோ பிரேட்டேனியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான ரூப்லெவ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பிரிட்டன் வீரர் 7-5 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 6-1 என வென்று சாம்பியன் பட்ட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் குயிண்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என ரூப்லெவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஹேலிஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-5) என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான ரூப்லெவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.
ரஷியா வீரரான ரூப்லெவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.