என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜூன்"

    • லியோ படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
    • புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் அர்ஜூன். இவர் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர இவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார். சந்திப்பின் போது, பிரதமர் மோடிக்கு புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் பிரதமரை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகின்றன. 

    • அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது
    • நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது

    1996-ம் ஆண்டில் சுந்தர் சி-யின் நகைச்சுவைத் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி ஆகியவற்றில்உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுராஜ். 1997-ம் ஆண்டில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் சுந்தர் சி-க்கு தொடர்ந்து உதவியதோடு ஜானகிராமன் படத்தின் இணை இயக்குனராகவும் இருந்தார்.

    பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யை வைத்து 2006-ல் தலைநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுராஜ். 'அதன் பின் 'மருதமலை' படத்தை 2007-ல் சுராஜ் இயக்கினார். இப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். 2009-ல், தனுஷ், தமன்னா நடித்த படிக்காதவன் படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :-



     

    மருதமலை படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். அவர் ஸ்கிரிப்டை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையை வாங்கினார். இதில் நடித்திருந்தால் மருதமலையே அவரது முதல் போலீஸ் வேடமாக இருந்திருக்கும். ஆனால், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் "சச்சின்" படம் காரணமாக விஜய் இதிலிருந்து விலகினார்.

    இதற்கிடையில் நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது. அவர் அதே நேரத்தில் "கிரீடம்"படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்ததாலும், வடிவேலுக்கு அப்போது அஜித்துடன் இந்த படத்தில் நடிக்க பிடிக்காததாலும் எங்களால் இந்த படத்தை தொடர முடியவில்லை.

    பிறகு நான், சுந்தர்.சி பணியாற்றிய "கிரி"படம் மூலம் அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது. உருவானது.அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர்  கூறினார்.

    • சூது கவ்வும் 2 படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார்.
    • இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

    இயக்குநர் நலன் குமாரசாமி இக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூலி ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த பட வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார். இந்த படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

     


    அதன்படி சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.



    • நலன் குமாரசாமி இக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது
    • இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது

    இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள அந்த போஸ்டர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

    இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

     

    நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

     

     

     

    இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
    • 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    வெங்கட் பிரபு தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கோட் திரைப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான விசில் போடு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிக வைரலானது.

    வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    கடந்த மாதம் படத்தில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

    அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    இத்திரைப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்டத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
    • ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.

    உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

    வரும் ஜூன் 10-ம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.

    தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவருடைய மகன் உமாபதி ராமையாவும் திரைத்துறையில் நடிகராக இயக்குனராகவும் வலம் வருகிறார். நடிகர் அர்ஜூனின் மகளை விரைவில் மணம் முடிக்கவுள்ளார்.
    • மாணிக்க வித்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். மோசஸ் இந்த படத்திற்கு இசையமைக்க எஸ் என் வெங்கட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

    பிரபல நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையா ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். இவருடைய மகன் உமாபதி ராமையாவும் திரைத்துறையில் நடிகராக இயக்குனராகவும் வலம் வருகிறார். நடிகர் அர்ஜூனின் மகளை விரைவில் மணம் முடிக்கவுள்ளார்.

    அதன்படி ஏற்கனவே அதாகப்பட்டது மகாஜனங்களை , மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்துள்ள உமாபதி ராமையா 'ராஜகிளி' என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்பொழுது உமாபதி ராமையா, 'பித்தல மாத்தி' எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் உமாபதி ராமையாவுடன் தம்பி ராமையா, பால சரவணன், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படம் காமெடி கலந்த கதைகளத்தில் உருவாகியுள்ளது. மாணிக்க வித்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். மோசஸ் இந்த படத்திற்கு இசையமைக்க எஸ் என் வெங்கட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி உள்ளது.

    இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூன் 14 உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு தற்பொழுது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அது தொடர்பாக பசத்தில் நடித்த பால சரவணன் படத்தில் நடித்த அவனுபவத்தை பற்றி பேசி ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×