என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா ஓபன் பேட்மிண்டன்"
- இந்தியா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
- இதில் மலேசியா ஜோடியை வென்று இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்துவருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மலேசிய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- முதல் செட்டை இந்திய ஜோடி 21-15 எனக் கைப்பற்றியது.
- ஆனால் அடுத்த இரண்டு செட்களையும் இழந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது.
இந்தியா ஓபன் பேட்மிண்டன் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஆண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் ஹியுக் காங்- செயுங் ஜே சியோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-15 என எளிதாக கைப்பற்றியது. ஆனால், 2-வது செட்டை 11-21 என இழந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடியது. என்ற போதிலும் 3-வது செட்டை 18-21 என இழந்தது. இதனால் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டு 2-வது இடத்தையே பிடித்தது.