என் மலர்
நீங்கள் தேடியது "அஜய் குமார்"
- தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.
- தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமார் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை தனியாகவும் தேர்தல் பொறுப்பாளர்களை தனியாகவும் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து அஜய் குமார் நிருபர்களிடம் கூறும்போது, "தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வருகிற 28-ந்தேதி நடைபெறும்" என்றார்.
ஏற்கனவே இரு கட்சிகளிலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள். பின்னர் மேலிடம் தொகுதிகளை உறுதி செய்யும்.