search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போனால் ஏற்படும் பாதிப்புகள்"

    • மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது மாரடைப்பு மட்டுமே.
    • முதுகுத் தண்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் மொபைல் பயன்படுத்துவது எப்படி?

    1990-களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது மாரடைப்பு மட்டுமே. ஆனால்ல இந்த காலகட்டத்தில் இதயநோய்க்கு ஈடாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் வாட்டி வதைப்பது கழுத்து வலி மற்றும் முதுகு தண்டு வலி தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு சீரியசான பிரச்சினையையாக உருவெடுத்திருக்கும் இந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியுமா?. ஆம் சரி செய்ய முடியும் என்று கூறுகிறார், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விக்னேஷ் புஷ்பராஜ்....அவர் கூறியதாவது:-

    இளைஞர்களிடம் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்தே அவர்களின் கழுத்து வலியும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது என்றே கூற வேண்டும். முதலில் மொபைல் போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். அதாவது மொபைல் பயன்பாடு பற்றி அல்ல, கழுத்துக்கும், முதுகுத் தண்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் மொபைல் போனை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுவாக மொபைல் போனை பேசுவதற்காக பயன்படுத்துவதை விட வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பார்கவும், கேம் விளையாடவுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு யாரும் மொபைல் போனை முகத்துக்கு நேராக வைத்து நிமிர்ந்து பார்ப்பது இல்லை. கைக்கு நேருக்கு நேர் வைத்து பார்க்கல, நாம தான் போன தேடி போய் பார்க்கிறோம்.

     குனிந்து கொண்டே மொபைல் பார்த்தால் கழுத்தில் இவ்வளவு பாரம் கூடுமா?

    மொபைல் போனை நிமிர்ந்த நிலையில் நேராக வைத்து பார்க்கும் போது, கழுத்தின் மேல் உள்ள தலையின் எடை வெறும் 5 கிலோ தான். ஆதே மொபைல் போனை நாம் 10 டிகிரி குனிந்து பார்க்கும்போது, நம் கழுத்தின் மீது 18 கிலோ வரை எடை கூடி பாரத்தை மேலும் அதிகரிக்கும். அதே 25 டிகிரி வரை குனிந்து பார்க்கும் போது 18 கிலோ முதல் 28 கிலோ வரை கழுத்தின் மீது எடை கூடும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபனமான ஒன்று.

    இப்படி பல மணி நேரம் குனிந்து கொண்டு மொபைல் போன் பார்ப்பதனால், கழுத்து பகுதியில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். நாளடைவில் அந்த அழுத்தத்தால் கழுத்துப் பகுதியில் தசை தேய்மானம் ஏற்படும். பின் அதுவே எலும்புத் தேய்மானமாக மாறி வலி அதிகரிக்கும்.

    தசை தேய்மானம் எலும்புத் தேய்மானமாக மாறிய பிறகு மெல்லமெல்ல நரம்பை பாதிக்கும். அதன் விளைவு கை, கால் நரம்புகளை பாதித்து நடப்பது, எழுதுவது கடினமாகி, ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிப்பது கூட சிரமமாகும் அளவுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.

    வாழ்க்கை முறையில் சின்னதொரு மாற்றம் செய்தால் இந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதாக தவிர்க்க முடியும். அனைத்திற்கும் தீர்வாய் நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய விஷயம் மொபைல் போனை நிமிர்ந்து முகத்துக்கு நேர்வைத்து பார்ப்பது தான்.

    இது ஒரு சின்ன மாற்றம் இத நாம பண்ணிட்டோம் அப்படின்னு வச்சிட்டோம்னா, ஒரு முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் பார்த்து அவங்க உங்க கழுத்து எலும்பு தேஞ்சுடுச்சு நரம்பு தேஞ்சுருச்சு நரம்பு நசுங்கிடுச்சு அப்படின்னு சொல்றதையும் பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு சர்ஜரி நடக்க இருக்கிறதையும் தவிர்க்க முடியும்.

    ×