search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிமினல்கள்"

    • பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும்
    • பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

    பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தாமல், அவர்களை சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆலோசனை கூறியுள்ளார்.

    சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது ஆசிக், சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாளுவதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • முன்னணி அழகான நகரங்களின் பட்டியலில் இந்த நாட்டை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டது
    • நிறமற்ற திரவமான ஸ்கொபோலமைன் பானங்களில் கலந்தால் தெரியாது

    தென் அமெரிக்காவில் பெரும் பகுதியை கொண்ட நாடு, கொலம்பியா (Colombia). இதன் தலைநகரம் பொகோடா.

    அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

    மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல வருடங்களாக சுற்றுலா செல்கின்றனர்.

    கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில்  இந்நாட்டை முன்னணியில் வைத்தது.

    ஆனால், கடந்த சில மாதங்களாக அந்நாட்டிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினருக்கு ஆபத்தாக உள்ளது.

    அமெரிக்க மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த டவ் கெர் (50), மெடலின் நகருக்கு 2-மாத சுற்று பயணம் சென்றார். தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த டவ் கெர், திடீரென காணாமல் போனார். அவரை கொலம்பியா காவல்துறை தேடி வந்த நிலையில், கொல்லப்பட்ட அவரது உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    சுமார் $2000 பணத்திற்காக அவர் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான பெண் ஒருவருடன் சென்ற போது அவரை அப்பெண்ணும் அவரது நண்பரும் பணத்திற்காக கொன்றதாக தெரிய வந்துள்ளது.

    இதே போல் ஜெஃப் ஹுவெட் என்பவர் ஓட்டல் அறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

    கடந்த 2023 அக்டோபர் வரை 32 வெளிநாட்டினர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 அமெரிக்கர்கள், 3 இங்கிலாந்து நாட்டவர்கள் என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ஐ விட 40 சதவீதம் அதிகம்.

    சுற்றுலா பயணிகளுடன் நட்பாக பேசி, அவர்கள் அருந்தும் பானங்களில் "ஸ்கொபோலமைன்" (scopolamaine) எனும் நிறமற்ற போதை மருந்தை கலந்து கொடுத்து, அவர்களை கடத்தி சென்று, உடைமைகளை திருடி, கொலையும் செய்கின்ற கும்பல் அதிகரித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

    அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடும் போது எச்சரிக்கையாக இருக்கவும், எங்கு சென்றாலும் சொந்த நாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்குமாறும், கொள்ளை முயற்சியில் சிக்கி கொள்ள நேரிட்டல் எதிர்க்காமல் இருக்குமாறும், தனது நாட்டிலிருந்து அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    ×