search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத் டெஸ்ட்"

    • ஜடேஜா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 4 விக்கெட் சாய்த்தார்.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் (80), கே.எல். ராகுல் (86) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது.

    ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் வெளியேறினார்.

    கடைசி விக்கெட்டுக்க அக்சர் பட்டேல் உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றபோதிலும் 44 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோடி ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • முகமது சிராஜ் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் கைப்பற்றவில்லை.
    • பும்ரா 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில், அவரால் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

    இங்கிலாந்தின் ஸ்கோர் 11.5 ஓவரில் 55 ரன் இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒல்லி போப் 1 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான கிராவ்லியை 20 ரன்னில் அஸ்வின் வெளியேற்றினார்.

    இதனால் இங்கிலாந்து 60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடசி 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார்.

    இந்த நிலைத்து மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 32 ரனகளுடனும் களத்தில் உள்ளனர்.

    • இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் தோற்ற ரோகித் சர்மா "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். பேட்டிங்கோ, பந்து வீச்சோ  திறமை அடிப்படையில் வீரர்கள் அவர்கள் பணியை திறமையாக செய்வார்கள்" என்றார்.

    இங்கிலாந்து அணி:-

    1. ஜாக் கிராவ்லி, 2. பென் டக்கெட், 3. ஒல்லி போப், 4. ஜோ ரூட், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. பென் போக்ஸ் (வி.கீப்பர்). 8. ரேஹன் அகமது, 9. டாம் ஹார்ட்லி, 10. மார்க் வுட், 11, ஜேக் லீச்.

    இந்தியா அணி:-

    1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. ஜடேஜா, 7. பரத் (வி.கீப்பர்), 8. அஸ்வின், 9. அக்சர் பட்டேல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.

    ×