search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலங்கானா"

    • விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
    • ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விஸ்கி ஐஸ்க்ரீம் விற்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் சரத் சந்திரா ரெட்டி என்பவர் நடத்தி வந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.5 கிலோ எடையுடைய 23 விஸ்கி ஐஸ்கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கடைகள் வேறு எங்கும் செயல்பட்டு வருகிறதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வெள்ளத்திற்கு அல்லு அர்ஜுன் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். , அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலவர் கேசிஆர் மகன் கேடிஆர் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
    • கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்

    மழை வெள்ளம் 

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையினால் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வார்த்தைப் போர் 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைக் கையாளுவது குறித்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின்[கேசிஆர்] மகனுமான கேடிஆர் இடையில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

    கேடிஆரின் சந்திரபாபு நாயுடு ரெபரென்ஸ் 

    'ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 ஹெலிக்கப்டர்களை அம்மாநிலத்தில் மீட்புப் பணிக்கு அனுப்பியுள்ளார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு ஒரு ஹெலிக்கப்டரை கூட மீட்புப் பணிக்கு அனுப்பவில்லை. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது, கம்மம் மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள் வீதியில் இறங்கி உதவி கேட்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது வெள்ள சமயங்களில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் ரூ.5 லட்சம் தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் அரசை கேடிஆர் சாடியுள்ளார்.

     

    ரேவந்த் ரெட்டி பதிலடி 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கேசிஆர் தனது பார்ம் ஹவுஸை விட்டு வெளியே வரவே இல்லை. அதேநேரம் கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். நானும் அமைச்சர்களும் தான் இங்குக் களத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் வானிலை மோசமாக உள்ள காரணத்தால் தான் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கேடிஆர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார். 

    • 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் ஆசிரியை அறைந்துள்ளார்
    • சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.

    வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2 ஆம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில்  சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார்.

    இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

     சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
    • காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தார்.

    தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார்.

    பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

     

    ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.

    சர்ச்சைக்குப்பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளது.
    • மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளது.

    2019 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்த சுமார் 60 லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது

    தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 22 மரங்கள் வரை காணாமல் போயுள்ளதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகங்கள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஜூலை 31-ம் தேதி ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்குடன் இந்த விஷயமும் விசாரிக்கப்படவுள்ளது.

    • மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
    • இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.

    இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. 

    • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
    • பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பாலாபபூர் பகுதியில் உள்ள ராயல் காலனியில் நேற்று [ஜூன் 13] இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சையத் சமீர் என்ற அந்த 28 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பாபேட் பகுதியைச் சேர்ந்த அலங்காரத் தொழிலாளர் சையத் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் அவரைகொலை வெறியுடன் துரத்தியுள்ளனர். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைந்த ராயல் காலனி பகுதியில் சையதை துரத்திப் பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களில் ஒருவன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சையதை குத்தினான். சையத் சரிந்து கீழே விழுந்த நிலையிலும் அவரை கண்மூடிதனமாக அவர்கள் உதைத்ததை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    சையத்தை அவர்கள் தாக்கியபோது அருகே பலர் நடந்து சென்று கொண்டிருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் மர்ம நபர்களை வீடியோ காட்சிகளின் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    ×