என் மலர்
நீங்கள் தேடியது "கண் வலி"
- கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.
- அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

ஆகவே சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும். எனவே இத்தகைய பிரச்சினை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.

• கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதில் இருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
• நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.

• கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.
• கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.
- விழி வெண்படல அழற்சி பச்சிளம் குழந்தைகள் முதல் அனைவரையும் பாதிக்கிறது.
- சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை இருக்கும்.
கண் நோய் என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது.
வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கிறது. கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இந்த பாதிப்பு, கண்ணையும் இமைகளையும் கலங்கிய வண்ணம் ஈரப்பதத்துடன் வைக்கிறது.
இது ஆபத்தான ஒன்று இல்லையென்றாலும், சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை தொந்தரவு தரக்கூடியது.

* வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
* ஒரு தூய்மையான துணியை எடுத்து குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) நனைத்து லேசாக பிழிந்து அதனை கண்ணின் மீது போடுங்கள். இதை மாற்றி மாற்றி செய்து வாருங்கள். அவ்வப்போது துணியையும் நீரையும் மாற்றுங்கள்.
* கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
* கை நிறைய உலர்ந்த கொத்தமல்லியை எடுத்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி குளிர வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரால் கண்ணை நன்கு கழுவி அழுத்தம் கொடுக்க வேண்டும். இது எரிச்சலையும், வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க வல்லது.
* அருகம்புல் சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் வைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்நோய்கள் குறையும்.
* பன்னீரில் மரமஞ்சள், மஞ்சள் மற்றும் படிகாரம் ஆகியவற்றை கலந்து இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை கொண்டு முகம், கண்கள் ஆகியவற்றை கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.

* புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.
* ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலக்கவும். இதனை சிறிது பஞ்சில் நனைத்து கண்களைக் கழுவவும். மதர் எனப்படும் மாலிக் ஆசிட் கொண்டுள்ள ஆப்பிள் சீடர் வினிகர் பாக்டீரியத் தொற்றுக்களுடன் போராட வல்லது.
* செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய்,குங்குமப்பூ ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிந்த நீரில் கழுவ கண் சிவப்பு குறையும்.