search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கிய ரகசியங்கள்"

    • முன்னோர்கள் சொன்ன மூலிகைகளில் முக்கியமானது ஆடாதோடை.
    • மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடாதோடை.

    நம் முன்னோர்கள் மனிதனுக்கு வரும் வியாதிகளை கண்டறிந்து அதற்கான மூலிகைகளையும் கண்டுபிடித்து அதைப்பற்றி நம்மக்கு கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் ஆங்கில வைத்தியத்துக்கு அடிமையானதால் அதை இந்த சமூகம் கண்டுகொள்ளவே இல்லை. முன்னோர்கள் சொன்ன மூலிகைகளில் முக்கியமானது ஆடாதோடை ஆகும்

    மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடாதோடை. ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவருவதாகும்.

    பலருக்கு தொண்டையில் சளி கட்டி கொண்டு இருமல் முதல் மூச்சிரைப்பு வரை வந்து கொண்டேயிருக்கும். இந்த பிரச்சினை சரியாக இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை சளி சரியாகி உடல் எப்பொழுதும் வலுவாக இருக்கும்.

    பலருக்கு வயிற்றில் பூச்சி இருந்து கொண்டு பசிக்காமலும், உடல் சோர்வும் காணப்படும். இந்த வயிற்று பூச்சிகளை போக்கும் தன்மை கொண்டது இது. கபகொல்லி, சளிக்கொல்லி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. சிலருக்கு காய்ச்சல் வந்து பாடாய் படுத்திக்கொண்டே இருக்கும். காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

    ரத்தத் தட்டணுக்களை அதிகரிக்கும்:

    கொசுக்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, டெங்கு சுரத்தைப் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ரத்தத் தட்டுகளின் (Platelets) எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு சுரத்தில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்பது உங்களில் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல், உடல் முழுவதும் சிவந்த நிறமுள்ள புள்ளிகள் தோன்றல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும். டெங்கு சுரத்தில் குறையும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை ஆடாதொடையின் இலைகளுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சுரத்தைக் குறைப்பது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சளி, இருமல், சுர நோய்களை விரட்டி அடிப்பது என முழுமையான மூலிகை நாயகனாகத் திகழ்பவர் நம்ம ஆடாதொடை! ஒன்று அல்லது இரண்டு ஆடாதொடை இலைகளை மையாக அரைத்து, சுத்தமான தேன் கலந்து உட்கொள்ள மேற்குறிப்பிட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும். ஆடாதொடை இலைச் சாற்றில் சில சொட்டுகள் தேன் கலந்து ருசியான மருந்தாகவும் பருகலாம்.

    நுரையீரல் பாதையைத் தூய்மையாக்கும்:

    காரணமன்றி சளி, இருமல், சுரம் உங்களை அடிக்கடி தொந்தரவு செய்கிறதென்றால், ஆடாதொடையின் துணையை நாடுங்கள். பின் சளி, இருமல், சுரம் போன்ற எதிரிகளைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமிருக்காது. நெடுங்காலமாக நுரையீரல் பாதை தொற்றுகளைப் போக்குவதில் ஆடாதொடை முக்கியப் பங்கு வகிக்கிறது. தொண்டையில் உண்டாகும் கரகரப்பையும் ஆடாதொடை சேர்ந்த மருந்துகள் இதமாக்கும்.

    ×