என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திர முதல்வர்"
- பிரதமர் மோடிக்கு, திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி சிலையை ஆந்திர முதல்வர் வழங்கினார்.
- ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு.
ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை டெல்லிக்கு சென்றார்.
டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துள்ளார்.
சந்திப்பின்போது, திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி சிலையை பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் வழங்கினார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ள நிலையில், தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது