என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி விவசாயிகள் போராட்டம்"

    • அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
    • அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.

    கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

    கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பல கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தின் தலைவர்களுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.

    புதுடெல்லி:

    வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்துசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற நிலையில் அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைத்தனர்.

    ஆனாலும் டெல்லி எல்லைகளான சம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என பஞ்சாப் விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் தெரிவித்துள்ளார்.

    • அரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
    • வங்கிசேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.

    விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.

    கடந்த 6 மற்றும் 8-ந் தேதிகளில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை முன்னேறி செல்லவிடாமல் தடுத்தனர். இதையும் மீறி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் விவசாயிகள் சிலர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் குறைந்த பட்ச ஆகார விலையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி இன்று பேரணி செல்கிறார்கள்.

    அரியானா மாநிலம் ஷம்பு எல்லை பகுதியில் இருந்து 101 விவசாயிகள் அமைப்பு இன்று பிற்பகலில் டெல்லியை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள். இதை விவசாயிகள் அமைப்பான கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று காலை தெரிவித்தார்.

    டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடத்த வருவது 3-வது முயற்சியாகும். விவசாயிகள் டெல்லியை நோக்கி அணி வகுத்து வருவதையொட்டி அரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

    இதற்கிடையே விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செல்போன் சேவை, வங்கிசேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×