என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீசர்"

    • கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர்.
    • 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார்.

    மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

    கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார். அந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 'வெட்டு' என்ற பெயரில் இம்மாதம் 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

     

    ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் இப்படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக 'வெட்டு' வெளியாகிறது!

    ராகின் ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அங்கிதா நடிக்கிறார். இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, இயக்கம் அம்மா ராஜசேகர்.

    இசை எஸ்.எஸ்.தமன், பாடல் டி.ராஜேந்தர், ஒளிப்பதிவு ஷியாம் கே நாயுடு, நடனம் அம்மா ராஜசேகர், ஸ்டண்ட் சில்வா, கெவின், பிஆர்ஓ கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு பிரேம்நாத், தயாரிப்பு சேலம் வேங்கை அய்யனார்.

    • தெலுங்கு திரைப்படமான Arjun S/O Vyjayanthi படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
    • விஜயசாந்தி மற்றும் கல்யாண் ராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரைப்படமான Arjun S/O Vyjayanthi படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்படத்தில் விஜயசாந்தி மற்றும் கல்யாண் ராம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜயசாந்தி ஒரு நேர்மையான காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அவரது மகனாக கல்யாண் ராம் தன்  வழியிலேயே ஒரு நல்ல காவல் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கும் விஜயசாந்தி ஆனால் அதற்கு நேர் மாறாக மகனான கல்யாண் ராம் ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். ஆனால் தன் தாயின் மீது அன்பாக இருக்கிறார். இந்த நேர் எதிர் சிந்தனையுடைய இருவரும் மோதும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

    இப்படத்தை பிரதீப் இயக்கியுள்ளார். ஐபிஎஸ் கதாப்பாத்திரத்திற்கே பேர் போனவர் விஜய்சாந்தி மீண்டும் அதே ஐஏஎஸ் கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

    திரைப்படத்தை அசோகா கிரியேஷன்ஸ் மற்றும் NTR Arts நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையை அஜனீஷ் லோக்னாத் மேற்கொள்ள ஒளிப்பதிவை ராம் பிரசாத் செய்கிறார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டீசர் காட்சிகள் படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ்.
    • இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுள்ளார்

    சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ். மலையாள நடிகரான இவர் அடுத்ததாக லவ்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 4 தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுளார். இவர் இதற்கு முன் சால்ட் அன் பெப்பர், இடுக்கி கோல்ட் மற்றும் மாயநதி படங்களுக்கு இணை எழுத்தாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது. இது ஒரு ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ள்து. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஈ- பேசுவது கதாநாயகனான மாத்யூவிற்கு மட்டும் கேட்கிறது. அந்த லவ்லி என்ற ஈ- க்கும் மாத்யூக்கும் உள்ள நகைச்சுவை காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது. டிரெய்லரில் வரும் சில காட்சிகள் நான் ஈ திரைப்படத்திற்கு ஒற்றுப்போகிறது.

    இப்படத்தில் உன்னிமாயா பிரசாத், மனோஜ், அஸ்வதி ராமசந்திரன், பிரஷாந்த் முரளி, பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது தி டோர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள 'அமரன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • ‘மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள்

    நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள 'அமரன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.


    முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் பெயரும், டீசரும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்

    இந்த படத்திற்க்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதே பெயரில் 1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் அமரன் படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசரை பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் 'மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


    கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான அயலான் படமும் நல்ல வசூலை பெற்றிருந்தது.



    • சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்
    • . இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா.

    தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக சூர்யா இருக்கிறார். திரைத்துறை பணியிலும் , சமூக பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.

    2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் மக்களிடையே சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இதுவரை தயாரித்த படங்களில் கங்குவா தான்

    மிகப்பெரிய பட்ஜட் படம். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் கங்குவா படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'.
    • தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.

    இதனையடுத்து 2021-ல் இவர் நடித்த ஜெய் பீம் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்.

    பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

    இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. 10 மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கங்குவா படத்தின் டீசர் வெளியானது. கங்குவா டீசர், காட்சிக்கு காட்சி மிரள வைக்கும் அளவில் உள்ளது. சூர்யா, கூட்டத்தின் தலைவன் போலவும், போர் வீரை போலவும் தோற்றம் அளிக்கிறார்.

    கழுகு, முதலை, புலி மிருக காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக அமைந்து இருக்கிறது. சூர்யா மிக மூர்க்கதனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    டீசர் வெளியீட்டால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது.
    • இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடி வரை வசூலை ஈட்டியது.

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் புஷ்பா -2 படத்தின் டீசர் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தண்ணா, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்ற பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    இந்த போஸ்டரில் சலங்கையிட்ட கால் ஒன்று நடனம் ஆடுவதுப்போல் இடம் பெற்றுள்ளது. புஷ்பா-2 திரைப்படம் எந்த கதைச்சூழலில் நடக்கப்போகிறது என தெரியவில்லை. இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது

    பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா தி ரைஸ்'படம் வெற்றி பெற்றதையடுத்து. உலகளவில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் 373 கோடி ரூபாய் வசூளித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த பாகம் புஷ்பா- 2 தி ரூல் படம் தற்போது உருவாகி வருகிறது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுகுமார் இதனை இயக்கி வருகிறார். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்து வருகிறது.

    இப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) 11.07 மணியளவில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    படப் போஸ்டரில் அல்லு அர்ஜூன் ஒரு சிம்மாசனத்தின் மீது கோடாரியுடன் உட்கார்ந்து இருப்பது போல் காட்சிகள் அமைந்து இருக்கிறது. அவருக்கு பின்னால் ஒரு கூட்டம் கையில் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். இந்தப் போஸ்டர் இப்பொழுது ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிக்ப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ’ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
    • தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் ’சப்தம்’ படத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் ஆதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

    ஈரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அய்யனார், அரவான், கோச்சடையான், வல்லினம், ரங்கஸ்தலம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, நடிகை நிக்கி கல்ரானியை 2022 ஆம் ஆண்டு மணமுடித்தார்.

    தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சப்தம் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய், தக்குபாடி வெங்கடேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.
    • ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.

    ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஆதி ஒரு மருத்துவ கல்லூரி ப்ரொஃபெசராக காணப்படுகிறார். அந்த கல்லூரியில் ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. வெரும் சத்தத்தை வைத்தே திகிலாக காட்சிப் படுத்தியுள்ளன. சப்தம் திரைப்படம் இந்த கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.
    • நடித்திருக்கும் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

    பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.

    இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    தீவிரமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது அண்ணன் பாலாவிற்கு என் முழுமுதல் நன்றி .கடின உழைப்பு தந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றிகள். கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கும் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வணங்கான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ×