search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றிக் கழகம்"

    • அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது.
    • நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விகளுக்கு நேரடி பதில் அளிப்பதை சீமான் தவிர்த்து வந்த நிலையில், தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "நான் தனித்து போட்டியிடுகிறேன். என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நானாக இவருடன் செல்கிறேன், அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது."

    "நான் பிரபாகரன் மகன், என் பாதை தனி, என் பயணமும் தனி, என் இலக்கு தனி. எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என் நாட்டை எப்படி படைக்க வேண்டும் என்று என் முன்னோர்கள் தூக்கி சுமந்த கனவு அது. பூமியின் சொர்க்கமாக என் நாட்டை படைக்க நான் ஆசைப்படுகிறேன். அதற்கு இவரோடு சேரலாம், அவரோடு சேரலாம் என்றில்லை."

    "என்னுடன் சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் வாருங்கள். இல்லையெனில் விடுங்கள். ஒரு தலைவனுக்கு முதல் தகுதி, தன் மண்ணையும், மக்களையும் முழுமையாக நேசிக்க வேண்டும். நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன். அதனால் நான் தனித்து போட்டியிடுகிறேன்," என்று தெரிவித்தார். 

    • கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர்.
    • விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா?

    தஞ்சை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்று விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு நல உதவியாக புடவைகள் வழங்கினார்.

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மேல வீதியில் 50 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர். மேலும், கட்சி நிர்வாகி ஒருவரின் புதிய காரில் கட்சிக் கொடியை பொருத்தினார்.

    இந்த நிகழ்வுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.

    மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடியில் கொடி ஏற்றிய பின்னர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கமாகவும், இலக்காக உள்ளது. முதல்-அமைச்சர் நாற்காலியில் நிச்சயம் விஜய் அமருவார். இதற்காக தொண்டர்கள் அனைவரும் கட்சி பணி ஆற்றிட வேண்டும்.

    தொண்டர்கள் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா? அல்லது பொழுதுபோக்கு படமா? என்று இப்போது கூறமுடியாது. தற்போது கட்சி கொடியேற்று விழாவிற்கு வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புஸ்ஸி ஆனந்த் வருகையை யொட்டி மயிலாடுதுறை மேலவீதி பகுதியில் கட்சியினர் அலங்கார வளைவு அமைத்திருந்தனர்.

    அப்பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்ததாக கூறி, அதனை அகற்ற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தவெக சார்பில் செஞ்சி ராமச்சரந்திரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்.
    • செஞ்சி ராமசந்திரனின் 50 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்த விஜய் முடிவு.

    தவெகவில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அதிமுகளின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் அவைத் தலைவராக நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக சார்பில் செஞ்சி ராமச்சரந்திரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணையும் பட்சத்தில், கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    செஞ்சி ராமசந்திரனின் 50 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுகவில் செஞ்சி ராமசந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லாததை பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும், தவெகவின் மாநாட்டில் விஜய் முன்னிலையில் செஞ்சிராமசந்திரன் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • முதல் மாநில மாநாடு தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் பெயர்- தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, கட்சி கொடி மற்றும் அறிமுக பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார். அதன்படி நடிகர் விஜய், தமிக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23 ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று பதிலளித்தது. இந்த பதில் மனுவிற்கு ஓரிரு நாட்களில் போலீசார் பதிலளிப்பதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறினார்.

    இந்த நிலையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நளை காலை 11.17 மணிக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கும் தேதியை விஜய் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    • கோட் திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கியது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் 4-வது பாடல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு ஓன்றை விடுத்துள்ளது.

    விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கோட் திரைப்பட டிக்கெட்டை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    கோட் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கிய நிலையில் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி, பாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். சமீபத்தில் இந்த கட்சியின் கொடி மற்றும் பாடலை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார்.

    அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களை கொண்டுள்ளது. அதன் மத்தியில் இரு போர் யானைகளும், அதன் இடையில் வாகை மலர் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஏற்கனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை எந்த மாநில கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    கட்சிக் கொடியில் இடம்பெற்றிருந்த யானைகளை அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஆனந்தன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், "அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்று பகுஜன் சமாஜ் அங்கீகாரம் பெற்ற கட்சியாகும். எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்."

    "நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம் ஆகும். யானை சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது."

    "தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார்."

    "அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.
    • தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.

    நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

    நாகையில் நடக்கும் இந்த கட்சியில் இணையும் நிகழ்ச்சியை பார்க்குபோது, மீனவர்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கையோடு உள்ளனர் என்பது தெரிகிறது. முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. ஒரு அமாவாசை தாங்கும். அல்லது இரு அமாவாசை தாங்கும். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே இருக்கும் கட்சியைப் பார்த்து புது கட்சி தொடங்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.

    யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினார்கள். கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது. இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க. இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக வெற்றிக் கழம் கட்சி கொடி சில நாட்களில் அறிமுகமாகிறது.
    • த.வெ.க. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி கட்சி கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், கொடியேற்றி ஒத்திகை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    எனினும், இது தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும், 45 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!
    • எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்!

    சென்னை:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!

    எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்! நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம்!

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது.
    • மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது.

    இதையொட்டி கட்சியின் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பற்றியும் கட்சித் தலைவர் விஜய் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனைகளை செயல்படுத்தி வருகிறார்.

    விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி பிரபல அரசியல் கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்துவதற்கு விஜய் திட்ட மிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாநாடு நடத்து வதற்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய இடங்களை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொண்டர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


    திருச்சியில் மாநாடு நடத்துவது அனைத்து மாவட்டத்தினருக்கும் பொதுவாக இருப்பதால் பெரும்பாலான தொண்டர்கள் திருச்சியில் மாநாடு நடத்த வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து திருச்சி ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

    மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 'சாலை' என்ற ஊரில் பல ஏக்கர் பரப்பளவில் காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதையொட்டி மாநாடு மைதானத்தை கட்சி முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய்யின் அரசியல் வருகை குறித்து கனிமொழி கருத்து தெரிவித்தார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். திரைத்துறை தாண்டி, அரசியலில் களம் காண முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய், தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

    மேலும், விரைவில் கட்சி கொடி அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இடத்தை இறுதி செய்யும் பணிகளில் நிறைய இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன.

    இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எம்பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த எம்பி கனிமொழி, "விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு- அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • த.வெ.கவின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரம்.
    • எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என தகவல்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என த.வெ.க தலைமை தெரிவித்துள்ளது.

    த.வெ.கவின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமடைந்துள்ளனர்.

    மேலும், விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகும் வரை த.வெ.க தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவுப்பும் வராது என தகவல் வெளியாகியுள்ளது.

    செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியான பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ×