என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குநர் ஷங்கர்"

    • பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
    • மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவரது தங்கையான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

    கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.

    இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

    • கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
    • கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர் ஷங்கர். சினிமாவில் பிரமாண்ட படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ஷங்கர் "கேம் சேஞ்சர்" என்ற படத்தை இயக்கியுள்ளார். ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் ஷங்கர் ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். பயோபிக் எடுக்கும் ஆசை ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் இயக்குநர் சங்கர் கூறும் போது, "தற்போதைக்கு பயோபிக் எடுக்கும் ஆசை எதுவும் எனக்கில்லை. இதுவரை அந்த மாதிரி யோசனை வரவில்லை"

    "ஒருவேளை எடுத்தால், ரஜினிகாந்த் பயோபிக் தான் எடுக்க வேண்டும். இதை சொல்வதற்கு முன்பு வரை நானே இதை எதிர்பார்க்கவில்லை. அவரைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், எல்லோருக்கும் அவரைப் பற்றி நன்றாக தெரியும். நீங்கள் கேட்டதும் சட்டென தோன்றியது இதுதான். ஒருநிமிடம் முன்பு வரை அப்படி யோசனை இல்லாமல் தான் இருந்தது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைவரின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
    • அவருடன் பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 20-க்கும் குறைவான படங்களில் ஒன்று "லப்பர் பந்து." இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியிலும் ஹிட் அடித்தது.

    லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் நடித்து இருந்தனர். இதில் அனைவரின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் பூமாலை (கெத்து தினேஷ்) என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இந்த நிலையில் முன்னணி இயக்குநர் ஷங்கர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷ் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், அவருடன் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து பேசும் போது, "லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இப்படியொரு நடிப்பை நான் யாரிடத்திலும் பார்க்கவில்லை. எந்த சாயலும் இல்லாத நடிப்பாக இருந்தது. அது நடிப்பு போன்றே தெரியவில்லை. எப்படி அவர் இதை செய்தார் என்கிற மாதிரி இருந்தது. தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய நபர் அவர். தினேஷுக்கு பாராட்டுக்கள். அவருடன் பணியாற்ற வேண்டும்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் ரூ.11.50 கோடியை ஊதியமாக பெறவில்லை.
    • இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    'எந்திரன்' திரைப்படம் கதை விவகாரத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

    அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் ரூ.11.50 கோடியை ஊதியமாக பெறவில்லை. மற்ற பணிகளுக்காகவும் ஊதியம் பெற்ற நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என்று சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அமலாக்கத்துறையிடமே வழக்கை எதிர்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    மேலும் இயக்குநர் ஷங்கர் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப். 21-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    ×