என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் பயோபிக் தான் எடுக்க வேண்டும் - இயக்குநர் ஷங்கர்
- கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
- கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர் ஷங்கர். சினிமாவில் பிரமாண்ட படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ஷங்கர் "கேம் சேஞ்சர்" என்ற படத்தை இயக்கியுள்ளார். ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் ஷங்கர் ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். பயோபிக் எடுக்கும் ஆசை ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் இயக்குநர் சங்கர் கூறும் போது, "தற்போதைக்கு பயோபிக் எடுக்கும் ஆசை எதுவும் எனக்கில்லை. இதுவரை அந்த மாதிரி யோசனை வரவில்லை"
"ஒருவேளை எடுத்தால், ரஜினிகாந்த் பயோபிக் தான் எடுக்க வேண்டும். இதை சொல்வதற்கு முன்பு வரை நானே இதை எதிர்பார்க்கவில்லை. அவரைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், எல்லோருக்கும் அவரைப் பற்றி நன்றாக தெரியும். நீங்கள் கேட்டதும் சட்டென தோன்றியது இதுதான். ஒருநிமிடம் முன்பு வரை அப்படி யோசனை இல்லாமல் தான் இருந்தது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.