என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவிந்த் ஸ்ரீனிவாஸ்"

    • பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது
    • பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது.

    பெர்ப்லெக்ஸிடி ஏஐ

    செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்று சாட்ஜிபிடி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது தொடாத பகுதிகளிலும் கூட சிறப்பாகச் செயல்பட, கூடுதல் திறன்களோடு பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் வந்திருக்கிறது.

    சாட்ஜிபிடி என்பது படைப்புத் துறையிலும் உரையாடலிலும் பொதுத் தேவைகளுக்காகவும் பணியாற்றுகிறது எனில், பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது. கூகிளுக்கு நிகராக அல்லது அதை விட அதிகமான சாத்தியங்களைக் கொண்ட நிறுவனமாக பெர்ப்லெக்ஸிட்டியை உலகத்தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள். சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்ற தொழில்நுட்ப ஆளுமையாகவும், செயற்கை நுண்ணறிவுத்துறையின் முகங்களுள் ஒருவராகவும் அரவிந்த் ஶ்ரீநிவாசன் மதிப்பிடப்படுகிறார்.

    பெர்ப்லெக்ஸிடி ஏஐ, 2022ல், சான் ஃப்ரான்சிஸ்கோவில், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இயந்திரக் கற்றல் துறையிலும் விற்பன்னர்களான நான்கு பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தேடுபொறி நிறுவனம். இந்த நால்வரில் முதன்மையானவர், இதன் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ். சென்னையைச் சேர்ந்தவர். சென்னை ஐஐடியில் பயின்றவர்.

    ஓப்பன் ஏஐ அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருந்தவர் அரவிந்த் ஶ்ரீநிவாஸ். மற்ற மூன்று பொறியாளர்கள்: ஆண்டி கோன்வின்ஸ்கி, டெனிஸ் யரட்ஸ், ஜானி ஹோ ஆகியோர்.

    இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, பெரியளவில் வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன்.

    இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன்,

    சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 'ஒரு சமயத்தில் ஒரு கேள்வி' என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது.

    க்யூரியாசிடி கில்ஸ் த கேட்{Cat} என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர் உண்டு. ஆனால், இங்கே க்யூரியாசிடி பூனையைக் கொல்லவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாஸை உருவாக்கியிருக்கிறது! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

    அரவிந்த் ஶ்ரீநிவாஸ் ட்வீட்

    கமல்ஹாசன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, "பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் 'தக் லைஃப்' திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    • ஐஐடி சென்னை மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 3 பேருடன் உருவாக்கியது பெர்ப்லெக்சிடி
    • 300 சதவீதம் ஊதிய உயர்வு ஆச்சரியம் அளிப்பதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்

    இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்".

    கடந்த 2022 இறுதியில் தோன்றிய "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022ல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், "பெர்ப்லெக்சிடி ஏஐ" (Perplexity AI).

    பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன "தேடல்" (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.

    ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது.


    ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது:

    செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது.

    இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

    பணிநீக்கங்களை பொறுத்தவரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது.

    இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார்.

    கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    ×