என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜனசேனா"
- சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
- சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வாராஹி படை' புதிய அணியை தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பவன் கல்யாண், "இந்து கோயில்களுக்குச் செல்லும்போதும், சனாதன தர்மத்தைப் பின்பற்றும்போதும் சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம்.
இந்து மதத்தையோ, சனாதன தர்மத்தையோ கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது. சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நரசிம்ம வாராஹி படையில் ஜன சேனானி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் சனாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இந்த புதிய பிரிவு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கலாச்சார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
- நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
- ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.
நடிகர்கள் மீது பாலியல் புகார் சொல்லி தெலுங்கு பட உலகை கலங்கடித்த நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.
தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்து ஸ்ரீரெட்டி கூறும்போது, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். நான் எனது சமூக வலைத்தளங்களளில் எந்த பதிவையும் நீக்க போவது இல்லை. உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.
- நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 பாராளுமன்ற தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டசபை மற்றும் 4 பாராளுமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்ள், விஐபிக்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
இதனிடையே தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு உள்ளதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனசேனா சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூடி சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் ஜனசேனா கட்சியின் சட்டமன்ற தலைவராக பவன் கல்யாண் பெயரை மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததால், ஜனசேனா சட்டமன்ற கட்சி தலைவராக பவன் கல்யாண் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
- ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 98-120 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 55-77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா
ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 62 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
அதேநேரம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 62 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி என்பதில் பா.ஜ.க. மற்றும் பி.ஜே.டி. இடையே கடுமையான போட்டி இருக்கும். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இன்றைய கள நிலவரத்தை பொறுத்த வரையில் ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை. ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை. எனவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.
பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.
அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
- 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.
- மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.
ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்