search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனேரி பல்தான்"

    • இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்- மும்பை அணிகள் மோதுகின்றன.
    • புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்று உள்ள இந்தப் போட்டியில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடப்பு சாம்பியன் புனேரி பல்தானை சந்திக்கிறது. புனேயை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (அரியானா, பாட்னா) வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி வேட்கையுடன் இருக்கிறது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதுகின்றன. குஜராத் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. மும்பை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
    • எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

    பஞ்ச்குலா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டியின் 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், ஸ்ட்லர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 6 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

    புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் புனே-உ.பி. அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அரியானா-பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

    4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தில் உ.பி. அணியை வீழ்த்துவதன் மூலம் புனே அணி முதல் இடத்தை பிடிக்கும்.

    புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணியும், 6-வது இடத்தை பிடித்த அணியும் 'எலிமினேட்டர்' ஆட்டத்தில் விளையாடும். இதனபடி டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன.

    எலிமினேட்டர் 2 போட்டியில் அரியானா குஜராத் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

    டெல்லி-பாட்னா இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி முதல் அரைஇறுதியில் விளையாடும். புனே அணியுடன் மோத வாய்ப்பு உள்ளது.

    அரியானா-குஜராத் இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 2-வது அரை இறுதியில் விளையாடும். ஜெய்ப்பூர் அணியுடன் மோதும் வாய்ப்பு இருக்கிறது. வருகிற 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    ×