என் மலர்
நீங்கள் தேடியது "தன்யா சிங்"
- மாடல் அழகி தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை தொடர்பாக கடிதம் எழுதி வைக்காத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். தன்யா சிங், சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கான காணரம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம், தன்யா கிங் தற்கொலை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அபிஷேக் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் தன்யா சிங்கும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாடல் அழகி தன்யா சிங் அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகுதான் இது தொடர்பாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அதேவேளையில் அபிஷேக் சர்மா, தன்யா சிங்கின் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்தி வைத்திருந்ததாகவும், அவருடைய மெசேஜ்-க்கு பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறை நீண்டு நேரம் திறக்கப்படாத நிலையில், அவரது தந்தை சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பேஷன் டிசைனரான அவருக்கு, குறிப்பிடத்தகுந்த ரசிகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.