search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் பிரீமியர் லீக் 2024"

    • டெல்லி அணியில் ஷஃபாலி வர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • ஆர்சிபி அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா- மெக் லானிங் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதனையடுத்து பிரேக் விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடிய டெல்லி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    8-வது ஓவரை வீசிய சோஃபி மோலினக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷஃபாலி வர்மா 44, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0, ஆலிஸ் கேப்ஸி 0 என ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்ததால் பொறுப்புடன் ஆடிய மெக் லானிங் 23 ரன்களில் வெளியேறினார்.

    அடுத்து வந்த மரிசான் கேப் 8, ஜெஸ் ஜோனாசென் 3, மின்னு மணி 5, ராதா 12 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் டெல்லி அணி 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. 

    ஆர்சிபி அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்

    • ஆண்கள் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
    • அந்த மூன்று முறையும் சேசிங்கில் தோல்வியை தழுவியது.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) 4-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளி) கடைசி இடமும் பிடித்து வெளியேறின.லீக் முடிவில் 3-வது இடத்தை பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை வென்று முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்நிலையில் ஆர்சிபி-யின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இறுதிப்போட்டியில் 4-வது முறையாக சேசிங் செய்கிறது. ஆண்கள் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அந்த மூன்று முறையும் சேசிங்கில் தோல்வியை தழுவியது.

    ஆடவர் ஆர்சிபி அணி 2009 இறுதிபோட்டியில் டெக்கான் ஜார்ஜஸ் அணியுடனும் 2011 சிஎஸ்கே அணியுடனும் 2016 சன்ரைசர்ஸ் அணியுடனும் தோல்வியடைந்தது.

    இந்த இறுதிபோட்டிக்கு தோல்விக்கு மகளிர் ஆர்சிபி அணி முற்றுப்புள்ளி வைக்குமா என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடந்த 4 போட்டிகளிலும் ஆர்சிபி அணி டெல்லியுடன் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது.

    புதுடெல்லி:

    இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    3-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
    • நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மகளிர் ஐபிஎல் தொடரில் இம்முறை புதிய சாம்பியனாக சாதனை படைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுமாறு மகளிர் ஆர்சிபி அணிக்கு ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2 பவரான அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    அதைப் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். தனி நபராகவும் அணியாகவும் சேர்ந்து இத்தொடரில் அசத்திய இந்த இரண்டு அணிகளும் இறுதிபோட்டிக்கு வருவதற்கு தகுதியானவர்கள்.

    ஆர்சிபி அணிக்காக ஒரு சிறப்பு ஆதரவு தருகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். கோப்பையை வீட்டுக்கு கொண்டு வந்து இந்த மாதத்தின் பிற்பகுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரில் ஆடவர் ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை கொடுங்கள்.

    வாழ்த்துக்கள் நண்பர்களே. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    முன்னதாக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • யாசிகா பாட்டியா 45 பந்தில் 57 ரன்கள் விளாசினார்.
    • ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    2-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - மெக் லானிங் களமிறங்கினர். ஷபாலி வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மெக் லானிங் உடன் ஆலிஸ் கேப்ஸி ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 31 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து ஜெமிமா - ஆலிஸ் கேப்ஸி ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆலிஸ் கேப்ஸி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜெமிமா 42 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அமெலியா கெர், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். தொடக்க வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை யாசிகா பாட்டியா 45 பந்தில் 57 ரன்கள் விளாசினார்.

    கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    அந்த அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் விக்கெட் விழுந்தது. 2-வது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. 3-வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது.

    இதனால் 3 பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் 4-வது பந்தை எதிர்கொண்டார். அதை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

    ஆனால் 5-வது பந்தில் கவுர் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி. பவுண்டரி அடித்தால் "டை" என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் சஜனா களம் இறங்கினார். இவர் கடைசி பந்தை எளிதாக சிக்கசருக்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    34 பந்தில் 55 ரன்கள் விளாசிய ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்ட நாயகியாக (PLAYER OF THE MATCH) தேர்வு செய்யப்பட்டார்.

    • மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் மோதல்.
    • துவக்க விழாவில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    மகளிர் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் அறிமுக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. துவக்க விழாவில் பங்கேற்ற ஷாருக் கான் அதிரடியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

     


    பிரமாண்டமாக துவங்கிய அறிமுக நிகழ்ச்சியில் ஷாருக் கானை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களான கார்திக் ஆர்யன் சித்தார்த் மல்ஹோத்ரா, டைகர் ஷெராஃப், வருண் தவான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோரும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.

     


    கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி துவங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    ×