என் மலர்
நீங்கள் தேடியது "டாப் 10 பைக்"
- பைக்குகளின் மேம்பட்ட மாடல்களும் இடம்பெற்றன.
- கடந்த ஆண்டு வெளியான பைக்குகளில் டாப் 10 பட்டியல்.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் முற்றிலும் புதிய மாடல்களும், ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பைக்குகளின் மேம்பட்ட மாடல்களும் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான பைக்குகளில் டாப் 10 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
பஜாஜ் பல்சர் என்125
பஜாஜ் நிறுவனம் பல்சர் என்125 மோட்டார்சைக்கிளை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 94,707 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 124.53சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 12 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கவாசகி நிஞ்சா ZX-4RR
கவாசகி நிறுவனத்தின் டாப் எண்ட் மாடல்களில் ஒன்றாக இந்த பைக் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 9.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கில் 399 சிசி இன்லைன்-4 எஞ்சின் உள்ளது. இது 77 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.
ஹோண்டா எஸ்.பி. 125 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 125 மாடல் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 91,771 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 124சிசி சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மைலேஜை சிக்கனப்படுத்தும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.
ஹோண்டா எஸ்.பி. 160 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 160 மோட்டார்சைக்கிள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 162.71 சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.7 கிலோவாட் பவர், 14.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கவாசகி நிஞ்சா 1100SX
இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிஞ்சா 1100SX ரூ. 13.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதில் 1099சிசி இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 135 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள், பவர் மோட் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் ஸ்பீடு டுவின் 900
டிரையம்ப் நிறுவனம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்த புதிய ஸ்பீடு டுவின் 900 மாடலில் 900சிசி பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு கோன் கிளாசிக் 350
இந்திய சந்தையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கிலும் கிளாசிக் 350 மாடலில் உள்ள எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிஜிட்டல் அனலாக் கன்சோல், டிரிப்பர் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கே.டி.எம். 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர்
கே.டி.எம். நிறுவனம் தனது 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 22.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1301சிசி, டுவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு மோட்கள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு பியர் 650
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பியர் 650 மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 3.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 650சிசி பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் ஆர்
இந்திய சந்தையில் கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 22.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1350சிசி வி டுவின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 190 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
- இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது.
- முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் எத்தனை யூனிட்கள் விற்பனையாகின?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் எத்தனை யூனிட்கள் வரை விற்பனையாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி ஜனவரி 2024 மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் மாடலாக ஹீரோ மோட்டோகார்ப்-இன் ஸ்பிலெண்டர் மாடல் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஹோண்டா ஷைன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2024 ஆண்டின் ஜனவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனையான டாப் 10 மோட்டார்சைக்கிள் மாடல்கள் எவை என்ற பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஜனவரி 2024 டாப் 10 பைக்குகள்:
ஹீரோ ஸ்பிலெண்டர்: 2 லட்சத்து 55 ஆயிரத்து 122
ஹோண்டா ஷைன்: 1 லட்சத்து 45 ஆயிரத்து 252
பஜாஜ் பல்சர்: 1 லட்சத்து 28 ஆயிரத்து 883
ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ்: 78 ஆயிரத்து 767
டி.வி.எஸ். ரைடர்: 43 ஆயிரத்து 331
பஜாஜ் பிளாட்டினா: 33 ஆயிரத்து 013
டி.வி.எஸ். அபாச்சி: 31 ஆயிரத்து 222
ஹீரோ பேஷன்: 30 ஆயிரத்து 042
ராயல் என்பீல்டு கிளாசிக் 350: 28 ஆயிரத்து 013
ஹோண்டா யுனிகான்: 18 ஆயிரத்து 506