என் மலர்
நீங்கள் தேடியது "நஃபே சிங்"
- நஃபே சிங்குடன் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் உயிரிழந்தார்.
- காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.
அரியானாவில் இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நஃபே சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பகதூர் என்ற இடத்தில் நஃபே சிங் காரில் சென்று கொண்டிருந்தபோது சூழ்ந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து நஃபே சிங் மற்றும் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.