என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேடிஎம் வங்கி"
- டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மற்றும் நிதி சேவைகளை வழங்கும் தளம் பேடிஎம்
- பேடிஎம் வங்கியின் 51 சதவீத பங்குகளை விஜய் சேகர் சர்மா வைத்துள்ளார்
2010ல், விஜய் சேகர் சர்மா (Vijay Shekhar Sharma) என்பவரால் தலைநகர் புது டெல்லிக்கு அருகே உள்ள நொய்டா (Noida) பகுதியை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் "ஒன்நைன்டிசெவன் கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications)".
இந்நிறுவனத்தால் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மற்றும் நிதி சேவைகளை வழங்க தொடங்கப்பட்ட தளம், பேடிஎம் (Paytm). பேடிஎம், டிஜிட்டல் வங்கி சேவையிலும் ஈடுபட்டு வந்தது.
கடந்த ஜனவரி 31 அன்று, பேடிஎம் வங்கி, வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த விவரங்களை முறையாக சேகரிக்கவில்லை என்றும், நிதி பரிமாற்றம் தொடர்பான பல சட்டதிட்டங்களையும் அந்நிறுவனம் மீறி உள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கியால் (RBI) குற்றம் சாட்டப்பட்டு பேடிஎம் வங்கி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையில் பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மூலதனம் சரிவை கண்டது.
இதன் தொடர்ச்சியாக, ஒன்நைன்டிசெவன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இயக்குனர்கள் குழு இந்த நெருக்கடியை சமாளிக்கும் வழிவகைகள் குறித்து ஆலோசித்து வந்தது.
இந்நிலையில், பேடிஎம் இயக்குனர் குழுவில் தான் வகித்து வந்த தலைவர் பதவியை, விஜய் சேகர் சர்மா (45) ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் குழு மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய தலைவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.
பேடிஎம் வங்கியின் 51 சதவீத பங்குகளை விஜய் சேகர் சர்மா வைத்துள்ளார்.
மார்ச் 15 தேதியுடன் பேடிஎம் நிறுவனம் நிதி சேவைகளை நிறுத்த வேண்டும் என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.