என் மலர்
நீங்கள் தேடியது "பத்ம விபூஷண்"
- சிரஞ்சீவி பல படங்களில் நடித்து வருகிறார்.
- சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் வெற்றி பயணத்தை தொடர்ந்து வரும் சிரஞ்சீவி இப்போதும் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய கலை சேவைக்காகவும் அவர் செய்துள்ள, சாதனைகளுக்காகவும் அவருக்கு நமது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக மிக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவில் உள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள் நடத்தினர். அமெரிக்காவின் கலிபோர்னியா டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
- இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் 7 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
- இதில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரும் ஒருவர் ஆவார்.
புதுடெல்லி:
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ உள்பட மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரப்பை குடலியல் நிபுணர் துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி, முதல் சீக்கிய தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், கதக் நடனக்கலைஞர் குமுதினி லகியா, வயலின் இசைக்கலைஞர் லட்சுமிநாராயண சுப்ரமணியம், மறைந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மறைந்த தொழிலதிபர் ஒசாமு சுசுகி, மறைந்த பாடகி ஷ்ரத்தா சின்ஹா உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வாசுதேவன் நாயர், ஒசாமு சுசுகி, ஷ்ரத்தா சின்ஹா ஆகியோருக்கு மறைவுக்கு பிறகு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.