என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து ஆஸ்திரேலியா"
+2
- மிட்செல் மார்ஷ் 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- அலேக்ஸ் கேரி 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து ஹேசில்வுட்டின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.
நியூசிலாந்தும் முதல் இன்னிங்சில் பதிலடி கொடுத்தது. மாட் ஹென்றி ஏழு விக்கெட் சாய்க்க ஆஸ்திரேலியா 256 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் (73), கேன் வில்லியம்சன் (51), ரச்சின் ரவீந்திரா (82), டேரில் மிட்செல் (58), ஸ்காட் குகெலின் (44) ஆகியோரின் ஆட்டத்தால் 372 ரன்கள் குவித்தது.
முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்னதங்கியதால் ஆஸ்திரேலியா அணிக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஸ்மித் (9), லபுசேன் (6), கவாஜா (11), கேமரூன் க்ரீன் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 34 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
5-வது விக்கெட்டுக்கு டிராவிட் ஹெட் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிட் ஹெட் 17 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டிராவிஸ் ஹெட் மேலும் ஒரு ரன் சேர்த்த 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் அலேக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்ச்சி நின்றது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் கடந்து விளையாடினர். இதனால் ஆஸ்திரேலியா வெற்றி நோக்கி பயணம் செய்தது.
அணியின் ஸ்கோர் 220 ரன்னதாக இருக்கும்போது மிட்செல் மார்ஷ் 80 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஸ்டார்க் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
8-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 44 பந்தில் 32 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 65 ஓவரில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலேக்ஸ் கேரி 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரை 2-0 என வென்றது.
- 2-வது இன்னிங்சில் நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 41 ரன்கள் சேர்த்தார்.
- இதுவரை 1500 ரன்களுக்கு மேல் அடித்தும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்கடனில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 6 பவுண்டரியுடன் 46 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்.
நாதன் லயன் இதுவரை 128 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 162 இன்னிங்சில் 1501 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 12.72 ஆகும். ஆனால் ஒரு அரைசதம் கூட இதுவரை அடித்ததில்லை.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனை படைத்துள்ளார். அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1174 ரன்கள் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளார். இவரும் அரைசதம் அடித்தது கிடையாது. 41 அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 87 டெஸ்ட் போட்டிகளில் 1010 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்துள்ளார்.
வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நாதன் லயன் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிளென் பிலிப்ஸ் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
- நாதன் லயன் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் வெலிங்டனில் தொடங்கியது.
நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்னில் சுருண்டது.
கவாஜா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நைட்வாட்ச்மேன் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 41 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய கிரீன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட் 29 ரன்னில் வெளியேற, மிட்செல் மார்ஷ் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி 3 ரன்னிலும், ஸ்டார்க் 12 ரன்னிலும், கம்மின்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா அடுத்த 37 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் மொத்தமாக ஆஸ்திரேலியா 368 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக,
கேமரூன் கிரீன் சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய கிளென் பிலிப்ஸ்
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.
கேமரூன் கிரீன்
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.
அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
- முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்தார்.
- நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து சொற்ப ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.
அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
கேமரூன் கிரீன்
204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர். தற்போது வரை ஆஸ்திரேலியா 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
- மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்கடனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். கிரீன் களம் இறங்கியதும் கவாஜா 33 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா 89 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு கேமரூன் க்ரீன் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ஒருபுறம் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் கேமரூன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்ய முடியவில்லை.
ஹென்றி
ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் சேர்த்துள்ளது. கேமரூன் க்ரீன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹேசில்வுட் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.
அலேக்ஸ் கேரி 10 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 9 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வில்லியம் ஓ'ரூர்கே, ஸ்காட் குக்கெலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரச்சின் ரவிந்திரா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்