என் மலர்
நீங்கள் தேடியது "ட்ரெண்டிங்க் வீடியோக்கள்"
- டூத்லெஸ்.ஏஎம்ஜி எனும் ஐடி-யை கொண்ட பயனர் ஒரு வீடியோவை பதிவிட்டார்
- இன்ஸ்டாகிராம் ஹேண்டிலை பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா என BMW கேட்டது
சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல "டிரெண்டிங்" ஆகி பிரபலமாக உள்ளன.
அவ்வகையில் சில மாதங்களாக, தாங்கள் பதிவிடும் வீடியோக்களை சில பிரபலங்கள் அல்லது பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் "கமென்ட்" செய்தாக வேண்டும் எனும் பிடிவாதக்காரர்களின் வீடியோ பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் "டூத்லெஸ்.ஏஎம்ஜி" எனும் ஐடி-யை கொண்ட ஒரு பயனர், தான் வைத்திருக்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி (Mercedes-AMG) காரை குறித்து பதிவிட்டுள்ள வீடியோவை பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் பார்த்து, கமென்ட் பதிவிட்டால், தனது மெர்சிடிஸ் காரை விற்று விட்டு பிஎம்டபிள்யூ எம்340ஐ (BMW M340i) ரக காரை வாங்குவேன் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிஎம்டபிள்யூ நிர்வாகம் "நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் ஹேண்டில் பெயரையும் மாற்றி பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா?" என கேள்வி எழுப்பியிருந்தது.
மிக பெரிய கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ ஒரு பயனரின் வீடியோவிற்கு உடனடியாக பதிலளித்தது இணையத்தில் பாராட்டப்படுகிறது.
ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனம் பதிலளித்ததனால், அந்த பயனர் வாக்களித்தபடி தனது மெர்சிடிஸ் காரை விற்று பிஎம்டபிள்யூ காரை வாங்கினாரா எனும் விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்த கேள்வி-பதில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.