search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவேந்து அதிகாரி"

    • பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமுல் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.

    இதனிடையே பாலியல் புகார் தொடுத்த பெண் ஒருவர் , காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

    பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜகவினர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக தன்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதிலிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரம் தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஷாஜகான் ஷேக் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது
    • சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் மேற்கு வங்காள மாநில போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விசயம் பூதாகரமாக வெடித்தது. இதனால் ஷாஜகான் ஷேக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தலைமறைவான அவரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்தனர். சந்தேஷ்காலி விவகாரத்தில் கைது செய்யவில்லை. ஜனவரி மாதம் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்தது.

    இந்நிலையில் சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதுவும் நடக்கவில்லை, மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று இருவர் பேசுகின்றனர்.

    அதில், "வங்காளத்தை அசிங்கப்படுத்த பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் முதல் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவது வரை அனைத்தையும் செய்வது மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிதான். இதனை வங்காள மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பகிர்ந்துள்ளார். அதில், சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷனை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்காளத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயன்றதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    • பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
    • மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.

    இதில் மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது EVM தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக சுவேந்து அதிகாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சுவேந்தி அதிகாரி "EVM குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றபோது EVM சரியானது. பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் வகையில சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

    • மேற்கு வங்காள மாநிலத்திற்கு வழங்கக்கூடிய நிதியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.
    • வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி இறுதி கெடு விதித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் செல்ல இருக்கிறார். பா.ஜனதாவின் பெண்கள் பிரிவு தலைவர்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிரசார கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

    பின்னர் பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம், சொத்துகளை சட்டவிரோதமாக பறித்தல் சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரான ஷேக் ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்கள் வசித்து வரும் சந்தேஷ்காளி பகுதிக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமர் மோடியின் வருகைக்காக மேற்கு வங்காள பா.ஜனதாவினர் தயாராகி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தனு சென், பிரதமர் மோடியிடம் மேற்கு வங்காள மக்கள் கேட்க விரும்பும் விசயங்களை பட்டியலிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சாந்தனு சென் கூறுகையில் "மேற்கு வங்காளத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது நீங்கள் 18 எம்.பி.க்களை பெற்றீர்கள். அந்த எம்.பி.க்கள் டெல்லிக்கு வரும்போதெல்லாம், மேற்கு வங்காள மாநிலத்திற்கான நிதியை கொடுக்காதீர்கள் என்று அவர்கள் பரிந்துரை செய்தார்களா?. அவர்களின் மீது கவனம் செலுத்தி மாநிலத்தின் பல்வேறு திட்டத்திற்கான சுமார் 1.60 லட்சம் கோடி நிதியை நீங்கள் நிறுத்து விட்டீர்களா? என்று மேற்கு வங்காள மக்கள் கேட்க விரும்புகிறார்கள்.

    மேலும், கடந்த சில வருடங்களாக மேற்கு வங்காளத்தில் இருந்து நீங்கள் ஆண்டிற்கு 4.65 லட்சம் கோடி ரூபாயை நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் எடுத்துச் சென்றீர்கள். இதைப்பற்றியும் கேள்வி கேட்க விரும்புகிறார்கள்.

    அதோடு இல்லாமல் சுவேந்து அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய முடியுமா? என்றும் கேட்க விரும்புகிறார்கள். சுவேந்து அதிகாரியின் பெயர் சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ல் உள்ளது. மேலும் 20 எஃப்ஐஆர்-ல் உள்ளது" என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இருந்து பிரிந்து சென்ற சுவேந்து அதிகாரி, அக்கட்சிக்கு எதிராக பா.ஜனதா தலைவராக எதிர்த்து நிற்கிறார்.

    ×