search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிந்த்ரி உரத்தொழிற்சாலை"

    • பிரதமர் மோடி ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
    • ஜார்க்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிந்த்ரி பகுதியில் ரூ.8,900 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் உர்வராக் மற்றும் ரசாயன லிமிடெட் உரத்தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தி செய்யும். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    இந்தியாவின் யூரியா உற்பத்தி 2014-ல் 225 லட்சம் டன்னாக இருந்தது. இது தற்போது 310 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

    இன்று ரூ.35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை ஜார்க்கண்ட் பெற்றுள்ளது.

    சிந்த்ரி உர ஆலையை புதுப்பிப்பது மோடியின் உத்தரவாதமாக இருந்தது. அது இன்று நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியா யூரியாவில் தன்னிறைவு பெறும் என தெரிவித்தார்.

    இதுதவிர, ஜார்க்கண்டில் ரூ.26,000 கோடி மதிப்பிலான ரெயில், மின்சாரம் மற்றும் நிலக்கரி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    ×