என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மெட்ரோ ரெயில்"

    • சென்னை மெட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • பிப்ரவரி 9ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

    அந்த வகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84.63.384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை 86,15.008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 09.02.2024 அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,05,644 பயணதிகள் (Online QR 2,12,344: Static QR 2,32.315: Paper QR 21.29,890; Paytm 3,82,549; Whatsapp 3,70,008; PhonePe 1,76,751; ONDC 1.787), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28,640 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள்

    (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது.
    • பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புரிதலுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை நிறுத்தப்படுவதான் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுலாஅட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலாஅட்டை) பிப்ரவரி 1, 2025 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து கொள்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது. சுற்றுலா அட்டைகள் இனி பயன்படுத்த முடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயணத் தேவைகளுக்குடி டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், QR குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டுகள், ஒற்றை பயண டோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை (National Common Mobility Card) உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம்.

    தேசிய பொது போக்குவரத்து அட்டை இப்போது MTC பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது.

    எங்கள் பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புரிதலுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும்சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழு முயற்சி எடுத்து வருகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி 116.1 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி செலவில் 3 வழித் தடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி வரை 45.4 கி.மீட்டர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீட்டர், மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 44.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. இந்த 2-ம் கட்ட திட்டத்தில் முதல் பாதை பூந்தமல்லி -போரூர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    9 கி.மீட்டர் நீளத்தில் உள்ள இந்த வழித்தடத்தில் போரூர் புறவழிச்சாலை, தெள்ளியகரம், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, முல்லைத்தோட்டம், பூந்தமல்லி, பூந்தமல்லி புறவழிச்சாலை என மொத்தம் 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.

    இதில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான கரையான்சாவடி மற்றும் குமண்னசாவடியில் மெட்ரோ பணிகளில் பல்வேறு தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சவாலாக மாறி உள்ளது.

    குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதே போல் கரையா்னசாவடி, குமணன்சாவடியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் நிலையங்கள் கட்டப்படுகின்றன. இந்த பணி சவாலாக மாறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, கரையான்சாவடி, குமணன்சாவடியில் மெட்ரோ ரெயில் பணிகள் சவாலாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும். கடந்த ஆண்டுமுதல் கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    ×