search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் அயர்லாந்து தொடர்"

    • அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் அடித்த சிக்சர் வைரலாகி வருகிறது.
    • அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20-யில் ஆப்கானிஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 59 ரன்களையும், ரஷித் கான் 25 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி ஆண்ட்ரு பால்பிர்னி 45 ரன்களையும், கரேத் டெலானி 39 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்காக போராடினர். ஆனாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 2-வது டி20 போட்டியின் போது ரஷித் கான் அடித்த சிக்சர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆட்டத்தின் 18-வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் நோ லுக்கிங் ஷாட் மூலம் பந்தை சிக்சருக்கு விளாசினார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

    • அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • டெஸ்ட் போட்டிகளில் தங்களது முதல் வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 53 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 52 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து 108 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் சுமாராகவே விளையாடியது. இதனால் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து அணிக்கு 111 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்ட பரபரப்பாக இருந்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர்-ஆண்ட்ரூ பால்பிர்னி ஜோடி பொறுப்புடன் ஆடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இதன் மூலம் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    ×