search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேபிட்டல்ஸ்"

    • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை.
    • ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 வீரர்களை தக்கவைத்துள்ளது. அக்சர் படேல் ரூ.16.5 கோடி, குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடி, தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.10 கோடி, அபிஷேக் போரெல் ரூ.4 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்கவைக்கவில்லை. இதனால் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், "டெல்லி அணியின் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் பெயர் இல்லாததற்கு பணம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ மீண்டும் வாங்கும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்த ரிஷப் பண்ட், "டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

    இம்மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

    ×