என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச மகளிர் தினம்"

    • இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மார்ச்-8 பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.

    வருகிற 8-ந் தேதி, இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த நாள் பிறந்ததோ, போராட்டத்தில். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி, உழைக்கும் பெண்கள் 15 ஆயிரம் பேர் திரண்டு ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

    இந்த நாளை தேசிய பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி. இத்தினத்தை சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின் என்ற அம்மையார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை தெரிவித்தார் அவர். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

     அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டே கடந்த 2011-ம் ஆண்டு நூறாவது சர்வ தேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐக்கிய நாடுகள் சபை. மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.

    அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்து வருகிறது ஐ.நா. சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் இந்த நாள், பெண்கள் சாதிக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நினைவுபடுத்தும் நாளாகவும் அமைந்திருக்கிறது.

    சர்வதேச பெண்கள் தினம் ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாடுகளில் பெண்கள் தினத்தை யொட்டி சில நாட்களுக்கு பூக்கள் விற்பனை இருமடங்காக களை கட்டுகிறது. சீனாவில் பல இடங்களில் மார்ச் 8 அன்று பெண் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

     இத்தாலியில் பெண்கள் தினத்தில் மிமோசா பூக்களை வழங்கும் வழக்கம் உள்ளது. அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்கப் பெண்களின் சாதனையை கவுரவப்படுத்தி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் இந்த மாதத்தில் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்.

    சமூகத்தின் சரிபாதியாய் உள்ள பெண்கள்தான், ஆண்களுடன் இந்த உலகத்தை நகர்த்தும் இரு சக்கரங்களில் ஒன்றாக உள்ளனர். அவர்களைப் போற்றும் பெண்கள் தினம் பெருமைக்குரியதே.

    • சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நாடு முழுதுமுள்ள பெண்களுக்கு ஜனாதிபதி சர்வதேச மகளிர் தின வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.

    புதுடெல்லி:

    சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது.

    நம்முடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக இருக்கிறார்கள். இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் தங்களுடைய அடையாளங்களை அவர்கள் பதித்து வெற்றி கண்டுள்ளனர்.

    எனினும், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளைப் பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    சாதனை படைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைவதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
    • ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும்.

    சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "பெண் பிள்ளை படித்தால் சமூகமே முன்னேற்ற பாதைக்கு செல்லும்" என்று கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.

    அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வந்தே பாரத் ரெயிலை பெண் லோகோ பைலட்டுகள் மட்டும் இயக்கினர்.
    • அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில் எண் 22223, சி.எஸ்.எம்.டி-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், லோகோ பைலட் முதல் டிக்கெட் பரிசோதகர் வரை பெண்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட்டது.

    இந்த சிறப்பு ரெயிலை பெண் லோகா பைலட் சுரேகா யாதவ், உதவி லோகோ பைலட் சங்கீதா குமாரி ஆகியோர் இயக்கினர்.

    இதில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரெயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில் பணிப்பெண்கள் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

    ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.

    மத்திய ரயில்வே பயணிகள் ரயில் மேலாளர் ஸ்வேதா கோன், ஒரு பெண் பிரசவம் போன்ற கடினமான பணியைச் செய்ய முடிந்தால், அவரால் எதுதான் செய்ய முடியாது? ஒரு பெண் திறமையானவராக மாறும்போது அவர் தனது முழு குடும்பத்தையும் உயர்த்த முடியும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும் என தெரிவித்தார்.

    ×