என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்தனா"

    • ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும்.
    • இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் 'விஸ்டன்' புத்தகம் ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும். இதில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    இதன்படி 2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

    31 வயதான பும்ரா கடந்த ஆண்டில் (2024) டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் சராசரியாக 14.92 ரன்னுக்கு ஒரு விக்கெட் சாய்த்து இருந்தார். ஒரு சீசனில் இவ்வளவு குறைவான ரன் சராசரியுடன் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக பும்ரா திகழ்கிறார் என விஸ்டன் பாராட்டி இருக்கிறது. அத்துடன் அவர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை கைப்பற்றியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    28 வயதான மந்தனா கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான போட்டியிலும் சேர்த்து 1,659 ரன்கள் குவித்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித், இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    • ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 80 ரன்கள் விளாசினார்.
    • அலிசா ஹீல் 38 பந்தில் 55 ரன்கள் விளாசிய போதிலும் உ.பி. வாரியர்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

    5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 80 ரன்கள் (50 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். எலிஸ் பெர்ரியும் அரைசதம் (58 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார்.

    அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலி களத்தில் நின்றது வரை அவர்களுக்கு நம்பிக்கை காணப்பட்டது. ஹீலி 55 ரன்னில் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு (8 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (5 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

    ஸ்மிரிதி மந்தனா

    20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 175 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 5-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி. வாரியர்ஸ் அணியின் 3-வது தோல்வி இதுவாகும்.

    இத்துடன் பெங்களூரு சுற்று நிறைவடைந்தது. அடுத்தகட்ட போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஏற்கனவே தொடக்க லீக்கில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு டெல்லி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் விருது வென்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    இந்தப் பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானின் குர்பாசும் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஜூன் மாதத்துக்கன சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா வென்றுள்ளார்.

    ×