என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைகளுக்கான இருக்கை வசதி"
- சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.
கார் வைத்திருப்போர் குழந்தைகளுக்கான இருக்கையை தொடர்ந்து உபயோகிக்க நேர்ந்தால் இருக்கை சரிவர பொருத்தப்பட்டு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இவ்விதம் பொருத்தவில்லை எனில் குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக முதுகுத்தண்டுவடம் பாதிப்பு சிறு குழந்தையாக இருக்கும்போதே ஏற்படுவதற்கு கார்களின் இருக்கை முக்கியக் காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
அதிலும் சில குழந்தைகளுக்கு மிகவும் மோசமான உடல் பாதிப்பு ஏற்பட காரணமாகிறது. குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையில் இருந்து தாயையும் சேயையும் வீட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவர். ஆனால் இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாக சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக காரின் இருக்கைகள் மிகவும் கடினமானவையாக உள்ளன.
இந்த குறையை சரிசெய்ய தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளை வைத்து எடுத்துச் செல்வதற்கான இருக்கையை காரில் பொருத்தித்தர ரோபோ எந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை கன கச்சிதமாக எவ்வித மனிதத் தவறும் இன்றி பொருத்துகின்றன. இதன் மூலம் குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இந்தியாவில் உள்ள கார்களில் குழந்தைகளுக்கான இருக்கைகளை சரிவரப் பொருத்தும் நுட்பம் பெரும்பாலான நிறுவனங்களில் வரவில்லை. ஆனால், விரைவில் வரலாம். இருந்தாலும், இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
குழந்தைகளுக்கான இருக்கை என்பது கை குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக, கூடுதலாக வழங்கப்படும் இருக்கை ஆகும். கூடுதல் குஷின்களுடன் வழங்கப்படும் இந்த பிரத்யேக இருக்கை அமைப்பானது முன் இருக்கையின் பின்னால் பின் இருக்கைக்கு நேரெதிராக வழங்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டாலும், சாலை பயணம் முழுவதும் உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த இருக்கைகள் சீட்பெல்ட்களை பயன்படுத்தி இருக்கையில் கட்டப்படுகின்றன. குழந்தைகள் இருக்கைகள் விற்பனைக்கு கிடைகிறது. வேண்டுபவர்கள் தங்களது காருக்கு ஏற்ப வாங்கி பொருத்தி கொள்ளலாம். தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தை இருக்கைக்கையை பொருத்தி கொள்வதற்கான கொக்கியை வழங்குகிறது.
அதுமட்டுமின்றி, குழந்தைகள் இருக்கைகள் பொருத்தப்படும் முன்பும், அதற்கு பின்னரும் இருக்கைகளுக்கு மத்திய பகுதி எந்தவொரு காரிலும் விபத்தின்போது குறைவாகவே பாதிப்பை சந்திப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரப்படி, இத்தகைய இருக்கைகள் விபத்துகளின்போது சுமார் 54 சதவீதம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான அபாயங்களை குறைப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்