என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி சிறுமி வழக்கு"
- சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
- சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இதன் காரணமாக கடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுச்சேரிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் கடலூரில் வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவசர அவசரமாக சென்றதை காண முடிந்தது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
- அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்திகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
முன்னதாக அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாண்டிச்சேரியில், 9 வயது சிறுமி இரண்டு நாட்களாகக் காணாமல் போன நிலையில், அந்தச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு, சாக்கடையில் தூக்கி எறியப்பட்ட சம்பவம், நம் அனைவர் மனதையும் கலங்கச் செய்துள்ளது."
"மேலும் இந்தச் செயலைச் செய்தவர்கள் போதைக்கு அடிமையாகிய இளம் வயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள். கஞ்சா விற்பனை என்பது மிக மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இதனால் மனிதர்கள் மிருகங்களாக மாறக்கூடிய ஒரு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."
"எனவே யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பும் இல்லை. இந்த சம்பவம் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தப் பாதகச் செயலை செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு எங்களது வருத்தத்தையும், சிறுவயதிலேயே தன் உயிரை இழந்த சிறுமிக்கு, தே.மு.தி.க. சார்பாகக் கண்ணீர் மல்க அஞ்சலியையும் செலுத்துகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
- இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படுகிறது.
புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
அந்த வரிசையில் புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை (மார்ச் 7) நடைபெறும் அமைதி பேரணியில் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைதி பேரணி நாளை மாலை 4 மணிக்கு துவங்க இருக்கிறது.
நாளை மறுதினம் (மார்ச் 8) முழுக்க பந்த் அமைதியான முறையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியா கூட்டணி மட்டுமின்றி நாளை மறுநாள் அ.தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கமல்ஹாசன் கண்டன பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
- ஆராய வேண்டிய பொறுப்பு சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது.
புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்திகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம், ராஞ்சியில் வெளிநாட்டு பெண் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம், மங்களூருவில் பள்ளி மாணவி முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம், சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், போதை பொருள் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் என சமீபத்திய குற்ற சம்பவங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டன பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
எங்கே போகிறோம்? என்ற கேள்வியுடன் துவங்கிய இந்த பதிவுக்கு இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "'எங்கே போகிறோம்' என்று ஆராய்வதைப் போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை,போதை,வெற்றுப் பெருமை,வக்கிரம்,குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. "எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்" என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது..," என குறிப்பிட்டுள்ளார்.
'எங்கே போகிறோம்' என்று ஆராய்வதைப் போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை,போதை,வெற்றுப் பெருமை,வக்கிரம்,குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. "எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்" என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது.. https://t.co/OzimOoLQ77
— leninbharathi (@leninbharathi1) March 6, 2024
- போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்.
- போதையில்லா தேசத்திற்கு பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.
புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசவன் கூறியிருப்பதாவது:-
இந்த சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.
போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம்.
போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தை சீரழிக்கும் போதை கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும்.
போதையில்லா தேசத்திற்கு பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்