என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு"
- அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது
- 1983ல், ஜபல்பூர் பல்கலைக்கழகம் "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" என பெயர் மாற்றப்பட்டது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ஜபல்பூர் (Jabalpur) நகரம்.
99.63 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு பல்கலைக்கழகமான "ஜபல்பூர் பல்கலைக்கழகம்" 1956ல் உருவானது.
இப்பல்கலைக்கழகம், 1983ல், "ராணி துர்காவதி விஷ்வவித்யாலயா" (Rani Durgavati Vishwavidyalaya) என பெயர் மாற்றப்பட்டது.
சுமார் 20 நாட்களுக்கு முன்னர், முதுநிலை கணினி அறிவியல் (M.Sc Computer Science) படிப்பின் முதல் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை மாணவர்களுக்கு வெளியிடப்பட்டது.
நேற்று முன் தினம் (மார்ச் 5) நடைபெறுவதாக இருந்த இத்தேர்விற்கான நுழைவுச்சீட்டையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் வழங்கி விட்டது.
இதையடுத்து தேர்விற்காக 20 நாட்களுக்கும் மேலாக படித்து வந்த மாணவர்கள், மார்ச் 5 அன்று பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தனர். ஜபல்பூரை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல மாணவர்கள் அதிகாலையிலேயே புறப்பட்டு ஜபல்பூர் வந்திறங்கி, பல்கலைக்கழக தேர்வு மையத்திற்கு வந்தனர்.
ஆனால், அங்கு தேர்விற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படாதது கண்டு அதிர்ந்த மாணவர்கள், இது குறித்து பேராசிரியர்களிடமும், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தேர்வு ஏதும் இல்லை என்றும், கேள்வித்தாள் கூட தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இப்பதிலால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கள் கண்களை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துணை வேந்தர் சந்தித்தார்.
இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். கே. வர்மா, "தேர்வாணையர், (exam controller) தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த தகவலை மாணவர்களுக்கு முறைப்படி தெரிவிக்க அதிகாரிகளும், பேராசிரியர்களும் தவறி விட்டனர். யார் இச்சம்பவத்திற்கு பொறுப்பு என கண்டறிய ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இந்திய தேசிய மாணவர் சங்க (National Students' Union of India) தலைவர் சச்சின் ரஜக், "பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தையும் கவனக்குறைவையுமே இது காட்டுகிறது. ஒரு தேர்விற்கான கால அட்டவணையையும் தேர்விற்கான மற்ற ஏற்பாடுகளையும் செய்ய ஒரு புகழ் பெற்ற பல்கலைக்கழகம் எவ்வாறு மறக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்