search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக வேட்பாளர்"

    • சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும்.
    • மத்திய துணை இராணுவப் படையினரை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஏ.சி. இராமலிங்கம் என்பவரின் வீட்டில் வைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளால் வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்கப்பட்டு வந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறிய திமுகவினரின் இந்த சட்டவிரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் விதிகளை சற்றும் மதிக்காமல் திமுகவினர் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை கையூட்டாக வழங்கியதைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்து வரவழைத்தனர். ராமலிங்கத்தின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி - சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளனர்.

    திமுகவின் மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கொந்தளித்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் மக்களின் கோபத்தை நன்றாக பார்க்க முடிகிறது. இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் திமுக, அரசு எந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயல்கிறது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் துணை போவது கண்டிக்கத்தக்கது.

    விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும். மத்திய துணை இராணுவப் படையினரை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததற்காக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
    • எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.

    மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். திமுக-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 21 பேர் கொண்ட பட்டியலில் 11 பேர் புதுமுகம்.
    • பொன்முடி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 21 பேரில் 11 புதுமுகங்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வடசென்னை- கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை- தயாநிதி மாறன், தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர். பாலு, தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி, வேலூர் கதீர் ஆனந்த், அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் போன்ற பிரபலங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, தருமபுரி தொகுதியில் செந்தில், தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் திமுக-வின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதுமுகம் தேவை என கட்சி விரும்பியதால் தற்போது பழனி மாணிக்கம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட திமுகவினர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை விரும்பவில்லை. அவருக்கு எதிராக கட்சிக்காரர்களிடையே எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.

    தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், அமைப்பு ரீதியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறத. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முழுமையாக சட்டமன்ற இடங்களை இழந்த மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. இதனால் தருமபுரியில் கட்சியின் அமைப்புகளை வளர்க்க தவறியதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

    தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு இருப்பதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    மேலும் சேலம் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபன், தென்காசி தொகுதியில் தனுஷ் எம்.குமார், பொள்ளா்சியில் சண்முக சுந்தரம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    • தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
    • பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.

    அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

    நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    ×