search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயக கட்சி"

    • நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது.
    • தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள்.

    தெலுங்கான மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.

    அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள். இது என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் அல்ல. அது போன்று நடக்காது. பா.ஜனதா தலைமையிலான என்டிஏ அல்லது காங்கிரஸ் தலைமையலான இந்தியா கூட்டணி பிராந்தியக் கட்சிகளின் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தலைகீழ் விஷயமாக இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள்.

    தெலுங்கானாவில் கடந்த முறை 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரண்டு இலக்க எண் இடங்களில் வெற்றி பெறுவோம்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் மட்டுமே காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் பெரிய நகைச்சுவையாகிவிட்டது. பெண்கள் பேருந்துகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளிலும் (போராட்டம்) போராடுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனது ஆட்சியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய சமூகமும் கடும் கோபத்தில் உள்ளது. இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.

    கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ.,வுக்கு ஒன்று அல்லது எதுவுமே கிடைக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • 6 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
    • இந்தக் கூட்டணியால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்தது.

    இந்த அழைப்பை ஏற்று சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க.-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இணைந்துள்ளது என அக்கட்சியின் எம்.பி. கனகமேடலா ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உருவாகி உள்ளதால் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×