என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சினிமா செய்திகள்."
- படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
- `சார்’ திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சி.
திருப்பூர்:
நடிகர் விமல் நடித்த 'சார்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறியதாவது:-
`சார்' திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும். ஓடிடி, திரையரங்கு என்பவை வெவ்வேறானவை. இரண்டும் திரைத்துறைக்கு மிகுந்த ஊக்கத்தை வழங்குகிறது.
திரையரங்குகள் மூலம் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவுகளை பெற்று கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.
விஜய் மாநாட்டிற்கு விஷால் செல்வேன் என கூறியது வரவேற்கத்தக்க விஷயம். எனக்கு அந்த நேரத்தில் படப்பிடிப்பு இருக்கும் காரணத்தால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் போஸ் வெங்கட் கூறுகையில், `சிறிய திரைப்படங்கள் வெற்றி பெற நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் முதல் 3 நாட்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு அடுத்த நாட்கள் திரையரங்குகளால் பொறுமை காக்க முடியாத நிலையில் நல்ல படங்களும் திரையரங்கை விட்டு வெளியேறுகிறது.
ஆனால் லப்பர் பந்து, சார் ஆகிய படங்களுக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. வார இறுதி நாட்கள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்களிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று படம் வெற்றி அடைந்திருக்கிறது. பொது மக்களின் நல்ல விமர்சனம் காரணமாக படம் வெற்றி அடைந்திருக்கிறது' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெகுதூரம் துரத்திச்சென்று லாரியை மடக்கினார்.
- விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பட்டணங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேசன். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு டிரெய்லர் லாரி வந்தது.
அந்த லாரி சைக்கிளில் சென்ற ரமேசன் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இருந்த போதிலும் அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. இந்நிலையில் அந்த வழியாக நடிகை நவ்யா நாயர் தனது காரில் வந்தார்.
அவர் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றதை பார்த்தார். அவர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை தனது காரில் பின் தொடர்ந்தார். காரின் ஹாரனை அடித்து லாரியை நிறுத்துமாறு சிக்னல் கொடுத்தார்.
ஆனால் லாரி டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இருந்தபோதிலும் நடிகை நவ்யா நாயர் விடாமல் வெகுதூரம் துரத்திச்சென்று அந்த லாரியை மடக்கினார்.
இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடிகை நவ்யா நாயர் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பட்டணங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தெரசா மற்றும் போலீசார் சென்றனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
லாரி மோதியதில் படுகாயமடைந்த ரமேசனை நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தங்களின் வாக னத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலில் துறவூர் தாலுகா ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .
பின்பு மேல் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் ரமேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலாக காரில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்த நடிகை நவ்யா நாயரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடி இருக்கிறார் எனவும், மே மாதம் அப்பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது.
நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது. மீனாக்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் "கோட்" படத்தை தயாரிக்கிறது.
விஜய் இப்படத்தில் இருவேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். நேற்று இப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடி இருக்கிறார் எனவும், மே மாதம் அப்பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது.
இப்போது அப்படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன், மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதப் போவதாகவும், எஞ்சாய் எஞ்சாமி புகழ் அறிவு ஒரு பாடலை எழுதப் போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்