என் மலர்
நீங்கள் தேடியது "இரும்புச்சத்து குறைபாடு"
- முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
- வயது அதிகமாகும் போது முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கும்.
முடிகொட்டுதல் பிரச்சினை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக எல்லோருக்குமே தினமும் கொஞ்சம் முடிகள் தலையில் இருந்து கொட்டத்தான் செய்யும். இது போக கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
1) பரம்பரை காரணங்கள் முக்கியமான தாகும்
2) பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், பிரசவ காலம், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கின்ற காலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.
3) தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய்த் தடுப்பு சக்தி குறைவு, இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.
4) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலை முடி முழுவதும் கொட்டி, நோய் குணமான பிறகு மறுபடியும் தலை முடி வளர்ந்து விடுவதுண்டு,
5) உடலாலும், மனதாலும் ஏற்படும் மிகப் பெரிய அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பின்னர், தலைமுடி கொட்டுவதுண்டு. பிரச்சினை சரியான பின் முடி மீண்டும் வளர ஆரம்பித்துவிடும்.
6) அடிக்கடி விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்தல், தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய், கிரீம், பேஸ்ட் போன்ற ரசாயனப் பொருட்கள் கலந்தவைகளை அடிக்கடி அதிகமாக உபயோகித்தல், ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் கிரீம் இன்னும் தலைமுடியை பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.
7) அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கை. தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே போன்று மூடி கொட்டலாம்.
8) வயது கூடக்கூட முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும்.
9) திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.
10) சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் உள்ளவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும்.
11) அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் முதலியவைகளும் தலைமுடியைக் கொட்டச்செய்யும்.
12) போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.

ஆண்களை பொறுத்தவரை தலைமுடி இழப்பால் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ பெரிய பிரச்சினை எதுவும் வராது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுடி இழப்பும் குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினைதான். தலைமுடியை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டும்.
தலைமுடியிடம் உங்கள் கோபத்தை காட்டக்கூடாது. பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். ரப்பர், பிளாஸ்டிக் கிளிப்புகளை தவிர்க்க வேண்டும். தலைமுடி இழப்பை சரிகட்ட என்னென்ன வைட்டமின்கள், சத்துணவுகள், பழங்கள் சாப்பிடலாம் என்பதை உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டறிந்து அவைகளை அதிகமாக பயன்படுத்துங்கள்.
அதிக சூரிய ஒளி நேரடியாக தலையில் படுமாறு இருப்பதை தவிர்க்கவும். சிகரெட் புகைப்பவர்கள் உடனே நிறுத்தவும். புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உங்களது டாக்டரிடம் கூலிங் தொப்பி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டபின் அதை உபயோகிக்கவும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைமுடி காய்ந்து போய் இருக்கக் கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்பதுண்டு. மூத்தோர் சொல்லை தட்டக்கூடாது. விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது முடியுமோ முடியாதோ தலை முடியின் விதியை யாராலும் வெல்ல முடியாது.
- கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல்.
- ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்தத்தை இழப்பதால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது அவர்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படலாம். இரும்புச்சத்து குறைபாடு பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எந்தவொரு பெண்ணும் தங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளை அனுபவித்தால் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உடலில் இரும்புச்சத்து இல்லாததால் ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்:
* இரும்புச்சத்து குறைபாட்டால் பெண்கள் தொடர்ந்து சோர்வு மற்றும் பலவீனத்தை அனுபவிக்கலாம்.
* உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்.
* இரும்புச்சத்து குறைபாட்டால் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும்.
* ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
* கர்ப்பிணிப் பெண்களில் பால் உற்பத்தி குறைதல்.

* முடி உதிர்தல்.
* குழந்தை குறைந்த எடையில் பிறக்கும் நிலை போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.
இரும்புச்சத்து குறைவதற்கான காரணங்கள்:
* மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பு இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

* கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
* பெண்களுக்கு ஏற்படும் செலியாக் நோய், கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற நோய்கள் இரும்பு உறிஞ்சுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
*அதிகப்படியான ரத்தப்போக்கு, புண்கள் அல்லது புற்றுநோய் போன்றவையும் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும்.

தடுப்பதற்கான வழிமுறைகள்:
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். சிவப்பு இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள். உலர்ந்த விதைகள், ஆரஞ்சு, பேரிக்காய், தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
மாதவிடாய் காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.