என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் நியூசிலாந்து"

    • ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் ஏப்ரல் 27-ந்தேதி வரை விளையாடுகிறது.
    • ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    நியூசிலாந்து டி20 கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் கடந்த 17 மாதங்களில் 3-வது முறையாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட இருக்கிறது.

    முதல் மூன்று போட்டிகள் ஏப்ரல் 18, 20 மற்றும் 21-ந்தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெற இருக்கின்றன. ஏப்பரல் 25 மற்றும் 27-ந்தேதிகளில் முறையே 4-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான ஏப்ரல் 14-ந்தேதி நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றடையும்.

    இந்த தொடரின்போது பிசிசிஐ-யின் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெறும். இதனால் பெரும்பாலான முன்னணி நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை. கடந்த முறையும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது பெரும்பாலான வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன் அணியில் இடம் பிடித்துள்ளார். டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னெர், கான்வே (தற்போது காயம் அடைந்து விளையாடாமல் உள்ளார்) ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    கிளென் பிலிப்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும், டிரென்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், பெர்குசன் ஆர்சிபி அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த தொடர் இரு கிரிக்கெட் நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை குறிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தான் 20 நிமிடத்திற்குள் முதல் விக்கெட்டை இழந்ததால் ரிஸ்வான் களம் இறங்கினார்.
    • 10 ஓவரின் கடைசி பந்தில் ரிஸ்வான் அடித்த பந்தை பிலிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கராச்சியில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வில் யங் (107), டாம் லாதம் (118) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 320 ரன்கள் குவித்தது.

    பின்னர் பாகிஸ்தான் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஃபஹர் ஜமான் காயம் காரணமாக பீல்டிங் செய்யும்போது முதல் ஓவரிலேயே வெளியேறியதால், 20 நிமிடம் கழித்துதான் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் பாபர் அசாம் உடன் சாத் ஷகீல் தொடக்க வீரரான களம் இறங்கினார். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹென்றி, ஓ'ரூர்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தான் ரன்கள் குவிக்க திணறியது.

    முதல் 3 ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4-வது ஓவரை ஓ'ரூர்கே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஷகீல் 19 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இவர் ஆட்டமிழக்கும்போது 17 நிமிடங்கள்தான் முடிவடைந்திருந்தது. இதனால் ஃபஹர் ஜமான் களம் இறங்க முடியவில்லை. ஆகையால் ரிஸ்வான் களம் இறங்கினார்.

    பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடியாலும் விரைவாக ரன்கள் அடிக்க முடியவில்லை. 10-வது ஓவரை ஓ'ரூர்கே வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ரிஸ்வான் ஆஃப் சைடு கல்லி திசையில அப்பர் கட் செய்தார். இந்த பந்தை கல்லி பகுதியில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் இடது பக்கம் டைவ் அடைத்து இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.

    இதை அவரால் கூட நம்பவில்லை. நியூசிலாந்து வீரர்கள் அவரை பாராட்ட, பாகிஸ்தான் ரசிகர்கள் எப்படி இந்த கேட்சை பிடித்தார் என வாயடைத்தனர். ரிஸ்வான் 14 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 22 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    ×