என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்ஐ"
- மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
- சென்னை அணி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதுவரை மும்பை அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.
அந்த வகையில் இரு அணிகள் விளையாடும் ஆறாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.
சூர்யகுமார் யாதவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
- பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் பெங்களூரு அணி சரிவில் இருந்து மீண்டது. போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
- ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும்
- ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிவருகிற 22 முதல் மே- 26 வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி 2024-க்கு முன் அந்த அணியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.மும்பை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹார்திக் பாண்டியாவைகேப்டனாக நியமித்து உள்ளது.
ஐபிஎல் பட்டத்தை வென்றவர் ரோஹித் சர்மா. இந்த அறிவிப்பிற்கு பிறகு எம்.ஐ.ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேப்டனை மாற்றும் உரிமையாளரின் முடிவை கண்டித்தனர்.இதே போல் முன்னாள் இந்திய மற்றும் எம்.ஐ ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும் கருத்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-
ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும். மேலும் ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.
தற்போது ரோஹித் இந்திய அணியை வழிநடத்தி சிறப்பாக விளையாடி வருகிறார்.ரோஹித் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார், இன்னும் சிறப்பாக விளையாடுகிறார்.ஐபிஎல் 2024 -க்கு முன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய எம்ஐ முடிவு கண்டிக்கதக்கது .
இவ்வாறு அவர் கூறினார்.