search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாருதி சுஸுகி"

    • ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    • உள்நாட்டு சந்தையில் மட்டும் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் ஜூன் மாதம் வரையிலான 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டைவிட நிகர லாபம் 47 சதவீதம் உயர்ந்து 3650 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.

    செலவு குறைப்பு முயற்சிகள், பொருட்களின் சாதகமான விலைகள் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றின் முக்கியமான காரணங்கள் இந்த லாபத்தை ஈட்ட முக்கிய காரணம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2024 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2,485 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 30,845 கோடி ரூபாய் நிகர விற்பனையாக இருந்த நிலையில் தற்போது 33,875 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    தற்போது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 5 சதவீதம் உயர்வாகும்.

    உள்நாட்டு சந்தையில் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விற்பனையில் இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 4 சதவீதம் உயர்வாகும்.

    2031 வரைக்கும் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வரவிருக்கின்றன. வருடத்திற்கு ஒரு புது மாடல் என்ற வகையில் வரவிருக்கிறது. ஏற்றுமதி விற்பனை 12 சதவீதம் (70,560) அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் ஜிம்னி (Jimny) சொகுசு கார் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    • இந்திய சந்தையில் மாருதி சுஸிகியின் பிரான்க்ஸ் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது.
    • பிரான்க்ஸ் விற்பனைக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் மாருதி சுஸிகியின் பிரான்க்ஸ் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. பலேனோ அடிப்படையிலான சொகுசு (SUV) காரான பிரான்க்ஸ் இந்தியாவில் கடந்த ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகப்படுத்தப்ப்டது.

    தற்போது லிமிடெட் வேரியன்ட் உடன் பிரான்ஸ்க் வெலோசிட்டி எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இருந்த போதிலும் 14 வேரியன்ட்ஸ் வகையில் கிடைக்கும் வகையில் வெலோசிட்டி எடிசன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    7.29 லட்சம் ரூபாயில் இருந்து இதன் விலை ஆரம்பமாகிறது. தொடக்கத்தில் டுர்போ டிரிம்ஸ்யோடு மட்டும்தான் கிடைத்தது. தற்போது 1.2லி பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பவர்டிரைன் உடன் கிடைக்கிறது.

    மாருது சுஸிகி பிரான்க்ஸ் வெலோசிட்டி எடிசன் சிக்மா, பிரான்க்ஸ் வெலோசிட்டி எடிசன் டெல்டா, டெல்டா+, டெல்டா+ (ஓ) பெயரில் விற்பனையாகிறது.

    360 டிகிரி வீயூ கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே உடன் 9-இன்ஞ் ஸ்மார்ட் பிரோ+ இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

    பிரான்க்ஸ் விற்பனைக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    • 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
    • திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.

    சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    ×