search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு ரெயில்"

    • ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.
    • போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    பராமரிப்புகள் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 28 மின்சார ரெயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாலையில் இருந்து சேவை ரத்து செய்யப்பட்டாலும் அதனை ஈடு செய்வதற்காக புதிய கால அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது.

    காலை மற்றும் மாலை பீக் அவர்சில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுகின்றன.

    சென்னை மாநகரத்தோடு புறநகர் பகுதியை இணைக்கும் பாலமாக விளங்கும் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.

    அரசு, தனியார் அலுவகங்களில் பணிபுரிவோர் நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு மின்சார ரெயில் சேவை மிகவும் பயன் உள்ளதாக இருப்பதால் பராமரிப்பு பணிக்காக ரத்துசெய்யும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன.

    இன்று தொடங்கி உள்ள பராமரிப்பு பணிகள் நாள் குறிப்பிடாமல் நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி ரெயில்கள் இயக்கப்பட்டன.

    பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகயில் 200-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை இந்த மார்க்கத்தில் இயக்கப்படுவதாகவும் குறிப்பாக நெரிசல் மிகுந்த வேளையில் சேவை குறைக்கப்படாமல் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனாலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பஸ்களும், பாரிமுனைக்கும் பஸ்களும் இயக்கப்பட்டன.

    ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் தேவை அறிந்து பஸ்கள் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்சார ரெயில் ரத்தால் தாம்பரம், எழும்பூர், பூங்காநகர், கோட்டை ரெயில் நிலையங்களில் சிறிது கூட்டம் காணப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடற்கரை ரெயில் நிலையத்தில் 5 ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

    மெட்ரோ ரெயிலை பொறுத்தவரையில் பீக் அவர்சில் அதிகபட்க அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இன்னும் தேவைப்பட்டால் இயக்கவும் தயாராக இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை குறைத்து வாரநாட்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
    • கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்கள் ரத்து.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை குறைத்து வாரநாட்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இருமார்க்கமாகவும் 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, தண்டவாளம் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும், தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும் என மொத்தம் 28 மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, கடற்கரையில் இருந்து காலை 6.52, 7.33, 8.43, 9.40, 11.30, 11.41 மதியம் 12.30, 12.50 மாலை 3.15, 4.25, 5.43, 6.35 இரவு 7.57, 8.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 5.12, 6.03, 7.17, 8.19, 9.00, 9.40, 10.40, 11.40 மதியம் 1.40, 2.57 மாலை 4.15, 5.10, 6.26 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இருமார்க்கமாக 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதிய நேர அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், இருமார்க்கங்களிலும் ஏற்கனவே 228 ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுவதால் 200 ரெயில்களாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதிய நேர அட்டவணை

    * கடற்கரை - செங்கல்பட்டு: காலை 3.50, 4.15, 4.35, 4.55, 5.30, 6.05, 6.20, 6.35, 6.50, 7.03, 7.50, 8.31, 9.02, 9.31, 9.56, 10.56, 11.40 மதியம் 12.28, 12.40, 1.45, 2.20 மாலை 3.30, 3.55, 4.05, 4.30, 5.00, 5.16, 5.36, 5.56, 6.12, 6.28 இரவு 7.06, 7.30, 8.10, 8.20, 8.30, 8.45, 9.10, 9.25, 9.45, 10.05, 10.40.

    * செங்கல்பட்டு - கடற்கரை: காலை 4.00, 4.25, 4.50, 5.25, 5.55, 6.40, 6.55, 7.15, 7.45, 8.05, 8.25, 8.40, 8.50, 9.20, 9.55, 10.40, 11.00, 11.30 மதியம் 12.00, 1.10, 1.45, 2.20 மாலை 3.05, 4.20, 4.55, 5.30, 6.00, 6.15, 6.40, இரவு 7.10, 7.35, 7.55, 8.20, 8.45, 8.55, 9.10, 10.10, 10.40, 11, 11.15.

    * கடற்கரை - தாம்பரம்: காலை 5.50, 7.15, 7.40, 8, 8.10, 8.20, 8.43, 8.55, 9.08, 9.14, 9.22, 9.48, 10.01, 10.06, 10.14, 10.21, 10.28, 10.36, 10.46, 11.08, 11.18, 11.28, 11.52 மதியம் 12.02, 12.15, 1.15, 1.30, 2.00, மாலை 3.15, 3.45, 4.15, 4.40, 4.50, 5.08, 5.26, 5.46, 6.20, 6.46, 6.57 இரவு 7.14, 7.39, 7.50, 8.55, 9.20, 11.05, 11.30, 11.59.

    * தாம்பரம் - கடற்கரை: காலை 3.55, 4.15, 4.35, 5.30, 6.10, 6.40, 7.15, 7.43, 7.58, 8.30, 8.39, 8.48, 8.58, 9.06, 9.22, 9.45, 10.00, 10.30, 11.00, 11.10 மதியம் 12.05, 12.35, 1.00, 1.32, 1.50, 2.20, 2.50 மாலை 3.20, 3.35, 4.05, 4.20, 4.35, 4.52, 5, 5.08, 5.23, 5.32, 5.42, 5.50, 6.06, 6.13, 6.30, 6.40, 6.58 இரவு 7.20, 7.45, 8.45, 10.40,

    * கடற்கரை - திருமால்பூர்: காலை 7.27, மாலை 3.00, இரவு 8.00

    * திருமால்பூர் - கடற்கரை: காலை 7.00, 11.05, இரவு 8.00

    * கடற்கரை - அரக்கோணம்: மதியம் 1.00, மாலை 6.07, 6.36.

    * அரக்கோணம் - கடற்கரை: காலை 4.40, 7.30, மாலை 5.15.

    * கடற்கரை - காஞ்சிபுரம்: காலை 5.15, இரவு 7.22. மறுமார்க்கமாக, காஞ்சிபுரம் - கடற்கரை: காலை 6.10, 9.30, மதியம் 1.40.

    * தாம்பரம் - செங்கல்பட்டு: காலை 6.00 செங்கல்பட்டு - தாம்பரம்: காலை 7.30, இரவு 9.45.

    * தாம்பரம் - காஞ்சிபுரம்: காலை 9.45.

    • பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏ.சி. ரெயில் விடுவது தொடர்பாக ரெயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி.மின்சார ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    இதையடுத்து தலா 12 ரெயில் பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் ஒதுக்கியது.

    ஏ.சி.ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஐ.சி.எப்.பில் நடந்து வருகிறது. கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.சி.மின்சார ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-


    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும். அதன் பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×