search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரனா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது
    • கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பத்திரனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    பத்திரனாவின் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,

    "என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

    களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும்" என்று அவர் கூறினார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின
    • களத்திற்குள் வர மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர்

    நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.

    எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

     ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரனானார் மேத்யூஸ்.

    இதற்கு ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக உலககோப்பைக்கு பின்பு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போதிலிருந்தே இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் களத்தில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது.

     இந்நிலையில் இந்த மோதலுக்கு முடிவுக்கட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் பத்திரனாவும் வங்கதேச அணி வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மானும் இணைந்து பகத் பாசிலின் ஆவேசம் படத்தின் புகழ்பெற்ற காட்சியை ரீல்ஸ் செய்துள்ளனர்.

    அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    • வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
    • டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×