search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈ சாலா கப் நம்தே"

    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
    • டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    இந்நிலையில் கோப்பை வென்ற ஆர்சிபி அணி சமூக வலைதளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் சாம்பியன் கோப்பையுடன் அணி வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 9 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை குவித்தது.

    இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.

    • இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம்.
    • வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று மந்தனா கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூரு அணிக்கு 114 ரன் இலக்காக இருந்தது.

    ஷபாலி வர்மா அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன் எடுத்தார். ஸ்ரேயங்கா பட் டேல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட் டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    எலிஸ்பெரி 35 ரன்னும் (அவுட் இல்லை), கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும், சோபி டேவின் 32 ரன்னும் எடுத்தனர். சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் கிடைத்தன.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    ஐ.பி.எஸ். போட்டியில் விராட் கோலியை கொண்ட ஆர்.சி.பி. அணி இதுவரை கோப்பையை வென்றது இல்லை. 16 ஆண்டுகளில் 3 தடவை இறுதிப் போட்டியில் தோற்றது.

    ஆனால் பெண்கள் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது.

    கோப்பையை வென்றதால் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டெல்லியில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அது சரியான நேரத்தில் நாங்கள் மீண்டு வர உதவியது. இது மாதிரியான தொடர்களில் அதுதான் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு நாங்கள் நிறைய பாடம் கற்றோம்.

    அணியை நாங்கள்தான் கட்டமைக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது. இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம். இந்த நேரத்தில் அணியின் அன்பான ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 'ஈ சாலா கப் நம்தே' என சொல்வது உண்டு. இப்போது கோப்பை நமது வசம் (ஈ சாலா கப் நம்து)

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

    ×