என் மலர்
நீங்கள் தேடியது "இளநரை பிரச்சினை"
- இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது.
- இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக்.
முதுமைக்கு நரை அழகுதான் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இன்றோ இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது. தோற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட பலருக்கும் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்றைக்கு நாம் இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். இது உங்கள் முடிக்கு உறுதி தந்து, முடி உதிர்வதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
ஆளி விதை – 100 கிராம்
கற்றாழை – 3 டீஸ்பூன்
விட்டமின் இ கேப்ஸ்யூல் – 3
செய்முறை:
ஆளி விதை ஹேர் பேக் செய்வதற்கு 100 கிராம் ஆளி விதையை எடுத்து அத்துடன் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நாம் கொதிக்க வைத்துள்ள ஆளி விதை தண்ணீர் ஒரு ஜெல் பக்குவத்திற்கு வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அதை ஒரு சல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டி எடுத்துள்ள ஆளிவ் ஜெல்லுடன் மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். பிறகு இதோடு இ கேப்ஸ்யூல் ஆயிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது ஆளிவ் ஹேர் பேக் ரெடி. முடியில் தேய்த்து 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து விட வேண்டும்.
இந்த ஆளிவ் ஹேர் பேக்கில் ஒமேகா 3 என்ற ஒரு வகையான சத்து இருப்பதால், இது நம் முடிக்கு உறுதியை தந்து இளநரை வருவதையும் தடுக்கிறது. இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவது முடியின் வலிமையை அதிகரிக்கும்.
- சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.
- வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். அந்த முடி கருகருவென இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நம் உடலில் வைட்டமின் பி-5 சரியான அளவில் இருக்க வேண்டும். இதன் சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.
'வைட்டமின் பி5'-யின் மற்றொரு பெயர், பென்டோதெனிக் அமிலம். இது எல்லா இயற்கை உணவுகளிலும் நிறைந்துள்ளது. அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பீன்ஸ், தக்காளி, சோயா பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது. இவை தவிர கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி பிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டு இறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளிலும் அதிகமுள்ளது.

இது செய்யும் அடிப்படை வேலை, நமது இயல்பான உடல் வளர்ச்சிக்குத் துணைபுரிவது. மற்ற வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. பென்டோதெனிக் அமிலம் கால்சியத்துடன் இணைந்து 'கால்சியம் பென்டோதினேட்' எனும் வேதிப்பொருளாக மாறிவிடும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வளர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி நரைப்பது தடுக்கப்படுகிறது.