என் மலர்
நீங்கள் தேடியது "வெளியுறவுத்துறை அமைச்சகம்"
- மோடி நாளை பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது
- பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இம்மாத துவக்கத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இம்மாத துவக்கத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஸ்போர்ட் விண்ணப்பதாரரை 30-45 வேலை நாட்களுக்குள் சென்றடையும்.
- புதிய முன்பதிவு (Appointment) எதுவும் திட்டமிடப்பட முடியாது.
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நாடு முழுவதும் உள்ள மையங்களில் விண்ணப்பம் செய்ய பாஸ்போர்ட் சேவா போர்டல் பயன்படுத்தப்படுகிறது. முன்பதிவு (Appointment) செய்யப்பட்ட நாளில், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் மையங்களுக்குச் சென்று சரிபார்ப்புக்காக தங்கள் ஆவணங்களை வழங்க வேண்டும். இதைத்தொடர்ந்து, போலீஸ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
பின்னர் விண்ணப்பதாரரின் முகவரிக்கு பாஸ்போர்ட் சென்றடைகிறது. விண்ணப்பதாரர்கள் வழக்கமான நடைமுறையைத் தேர்வு செய்யலாம். அதில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரரை 30-45 வேலை நாட்களுக்குள் சென்றடையும்.
இந்த நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் போர்டல் பராமரிப்பு பணிக்காக அடுத்த ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் புதிய முன்பதிவு (Appointment) எதுவும் திட்டமிடப்பட முடியாது. மேலும் முன்பதிவு செய்யப்பட்டவை மாற்றியமைக்கப்படும். பாஸ்போர்ட் சேவா போர்டல் தொழில்நுட்ப பராமரிப்புக்காக இன்று முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை செயல்படாது. இது வழக்கமான நடைமுறை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்துக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.
- தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு எடுக்கும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு.
2024 ஆம் ஆண்டில், குறிப்பாக அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, இந்துக்களுக்கு எதிராக 2,200 வன்முறை சம்பவங்கள் நடந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் பாகிஸ்தானிலும் இதுபோன்ற 112 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் மக்களவையில் தரவுகளை சமர்ப்பித்தது. அதில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்தந்த அரசாங்கங்கள் தங்கள் நாடுகளில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு எடுக்கும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு" என்று வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் அவல நிலையை, சர்வதேச அரங்கில் இந்தியா தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
- அப்போது இரண்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அதிகாலை காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறைப்பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மீனவர்கள் மீது துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசிடம் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை ராணுவம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதுவும் இலங்கை அதிபராக அனுர குமார திஷநாயகே பதிவு ஏற்ற பிறகு நடைபெறம் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.