என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிஒய் சந்திரசூரட்"
- தனிப்பட்ட சார்புகளை பிரதிபலிப்பதன் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்.
- அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதற்கொண்டு ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே கடுமையாக சிதைத்துவிட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் தங்கள் மத மற்றும் அரசியல் சார்புகளையும் அதுசார்ந்த செயல்களையும் பொதுவெளியில் பிரதிபலிப்பதன் மூலம் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்.
அப்படியிருக்கும்போது சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசியல் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி கலந்துகொள்வது நீதித்துறையில் அரசின் தாக்கம் இருப்பதை புலப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அங்கு ராமர் கோவில் கட்டாலம் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் சந்திரசூட்டும் ஒருவர்.
இதைப்பற்றி சமீபத்தில் பேசிய சந்திரசூட் அந்த வழக்கு நடந்த சமயத்தில் சாமி சிலை முன் அமர்ந்து தனக்கு ஒரு வழி கூறும்படி பிரார்த்தித்தேன் எனவும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் வழிகாட்டுவார் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக கூறிக்கொண்டார்.
மத ரீதியாக மிகவும் சர்ச்சைக்குரிய, எளிதில் ஒருவரை புண்படுத்திவிடக்கூடிய இதுபோன்ற விஷயங்களை சந்திரசூட் தெரிவிப்பது அவரது தனிப்பட்ட நமபிக்கை அவரது தீர்ப்பில் பிரதிபலித்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.
இந்த விவகாரங்களை முன்வைத்தே சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தையே சிதைத்துவிட்டதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே விமர்சித்திருக்கிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய துஷ்யந்த் தவே, "என்னுடைய 46 வருட சட்டப் பணி அனுபவத்தில், பொதுவெளியில் அதிகமாக தெரியக்கூடிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டைப் பார்க்கிறேன்.
அவர் விளம்பரத்தை விரும்புபவராக இருக்கிறார். அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதற்கொண்டு அவரைப் பற்றிய அனைத்தையும் ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்லாது உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே அவர் சிதைத்திருக்கிறார் என்று துஷ்யந்த் தாவே விமர்சித்துள்ளார்.
- உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது.
- நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் என்.டி.டிவி.-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது. உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது. உச்சநீதிமன்றத்தில் சிறிய வழக்கு என்று ஏதும் கிடையாது.
உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதித்துறைகளையும் ஆண்கள் மற்றும் பெண்கள் எளிதாக தொடர்பு கொள்வதை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.
சில நேரங்களில் எனக்கு நள்ளிரவில் கூட இ-மெயில் வந்துள்ளது. ஒரு முறை பெண் ஒருவர் மருத்துவ கருக்கலைப்பு தேவை எனக் கூறியிருந்தார். என்னுடைய ஸ்டாஃப்கள் என்னை தொடர்பு கொண்டனர். நாங்கள் அடுத்த நாள் அதற்கான பெஞ்ச் அமைத்தோம்.
சிலர் வீடு இடிக்கப்பட்டிருக்கலாம், சிலர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம், சிலர் சரணடைய வேண்டிய நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கலாம்... இதுபோன்ற இதயத்தை நொறுக்கும் வழக்குகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றன.
எந்த வழக்கும் சிறிய வழக்கு என்று கிடையாது. நாங்கள் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துகிறோம். சாமானிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் நோக்கம். யார் ஆட்சியில் இருந்தாலும், சாதாரண மக்களுக்கு கவலைகள் உள்ளன, சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
சமானிய மனிதன் எந்தவொரு பிரச்சனையை சந்தித்தாலும், முதலில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள நீதிபதிகளை சந்திப்பது முக்கியமானது என்று நினைத்தேன். மாவட்ட அளவிலான நீதிமன்றங்களை வலுப்படுத்தும்போது, நீதித்துறையுடன் மக்கள் தொடர்பை வலுப்படுத்துகிறோம்.
இவ்வாறு டி.ஓய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்